May 2, 2014

Ullam Un Vasamaanathadi

மிருணாவின் அக்கா மீனாவிற்கு பிறந்த பெண் குழந்தை இறந்து விடுகிறது. மிருணா, தன் அக்கா கணவன் தங்க வேலு அவ்வூரில் உள்ள ஒரு மன நலம் சரியில்லாத பெண்ணிடம் தவறாக நடந்து கொள்வதை கண்டு அதிர்ச்சி அடைகிறாள்.மிருணாவை பார்த்து காதல் வயப்பட்ட முகிலன்  தன் பெற்றோரிடம் சொல்லி முறைப்படி அவளை மணக்கிறான்.

முகிலனின் முரட்டு தோற்றத்தை கண்டு அவனிடம் இயல்பாக பழக தயங்குகிறாள். அவளின் மாமியார், பணக்கார இடத்திலிருந்து பெண் வரவில்லையே என்ற வருத்தத்தில் மிருணாவிடம் அதிருப்தி அடைகிறாள்.
மிருணா மேற்படிப்பு படிக்க முகிலன் உதவுகிறான்.

அந்த பைத்தியக்காரப் பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணம் தங்க வேலு என்பதை அறிந்த முகிலன் அவனை எச்சரித்து விட்டு அப்பெண்ணை ஒரு கருணை இல்லத்தில் சேர்க்கிறான். பிரசவத்திற்குப் பின் அப்பெண் இறந்து விடுகிறாள். மீனா அக்குழந்தையை தன குழந்தையாக தத்தெடுத்துக் கொள்கிறாள்.  

தனக்காகவும், தன்  குடும்பத்திற்காகவும் கவனம் எடுத்துக் கொள்ளும் முகிலனின் உண்மையான அன்பை மிருணா புரிந்து கொண்டாளா என்பதே மீதி கதை.



Apr 30, 2014

Kanne Unthan Nizhalaaven

வர்த்தினி ஒரு தவறான புரிதலின் காரணமாக தன் தாய் சுகந்தி மற்றும் தன்னை வளர்த்த மாமா Dr.சுந்தர மகாலிங்கதின் மீதும் வெறுப்பு கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். தோழி மீராவின் தந்தை சபாபதியின் உதவியால் ஆத்தூரில் தென்னவனின்  வீட்டில் மேர்பார்வையாளராகவும் அவனது கோமாவிலிருக்கும தாயை பராமரிக்கும் பொறுப்பை ஏற்கிறாள்.

வீட்டிலும் வர்த்தினி சின்ன சின்ன மாற்றங்களை கொண்டு வருகிறாள்.  அவளது முயற்சியால் தென்னவனின் தாயின் உடல்நிலை முன்னேற்றம்
  அடைகிறது. அவளை மணக்க விரும்புவதாக தன்னவன் அவளிடம் கூறுகிறான். அதனை ஏற்க மறுத்து ஊருக்கு செல்ல நினைக்கிறாள்.

வர்த்தினியை ஏமாற்றி தனது பண்ணை வீட்டில் அவளை சிறை வைக்கிறான். அதனால் அவன் மீது வெறுப்பை வளர்க்கிறாள் வர்த்தினி. ஒரு கட்டத்தில் அவளது நிராகரிப்பை உணர்ந்த தென்னவன் அவளுக்கு விடுதலை அளிக்கிறான். அவனது ஒதுக்கத்தில் தன் காதலை உணர்கிறாள் வர்த்தினி.

தன்  தாய் மற்றும் மாமாவின் மீது எந்த தவறும் இல்லை என்பதையும் அவர்களது ஏற்பாட்டின் படியே தான் தென்னவன் வீட்டிற்கு சென்றதையும் அறிந்து கொள்கிறாள். இறுதியில் வர்த்தினி தென்னவன் இருவரும் ஒன்று சேர்கிறார்கள். 

Apr 28, 2014

Gnabagam Poo Malai Thoovum

மலர் கலெக்டராக பதவியேற்று தன தந்தை பரமேஸ்வரன் மற்றும் தாய் அங்கையர்கன்னியுடன் அந்த ஊருக்கு வருகிறாள். அவ்வூர் மக்கள் அனைவராலும் விரும்பப்படுகின்ற கதிரை சந்திக்கிறாள்.

கதிரின் தம்பி அன்பு அவர்களது மனேஜர் சபாபதியின் மகள் ரேவதியை விரும்புகிறான். கதிரும் மலரை விரும்புவதாக தன் தாயிடம் கூறி குடும்பத்துடன் மலரின் வீட்டுக்கு சென்று பெண் கேட்கிறான்.

மலர் இதனை ஒப்புக் கொண்டாளா? அவளின் பின்னணி என்ன? என்பதை ஆசிரியர் சுவாரசியமாக கூறியுள்ளார். இக்கதையில் முத்தழகு எனும் திருநங்கை பாத்திரம் கதிரின் கசினாக வருகிறது. இப்பாத்திரத்தின் மூலம் திருநங்கைகளை சமுதாயம் எவ்வாறு பார்க்கிறது என்பதை பற்றியும் கதைப் போக்கில் விவரிக்கிறார்.

Apr 27, 2014

Theendi Sendra Thendral

Married ஒரு வாரத்திலேயே தவறான புரிதலின் காரணமாக நந்தாவை விட்டு பிரிகிறாள்  நயனி. ஐந்து  வருடங்களுக்குப் பிறகு தன் தந்தை மருதாசலதிற்கு நெஞ்சு வலியால்  ஆஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருப்பதாக நயனிக்கு போன்  
செய்கிறான் நந்தா. 

 Both ஒருவரையொருவர் மறக்க முடியாமல் தவிக்கின்றனர். நயனியின் நண்பன் மாதவன் நந்தா, நயனி இருவரும் தங்களுக்குள் மனம் விட்டு பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறுகிறான். ஒரு  கட்டத்தில் நந்தாவை தான் தவறாக புரிந்து கொண்டதை உணர்ந்து கொள்கிறாள் நயனி. 


Apr 25, 2014

Unakena Thavamirunthen

நித்திலா தாரா இருவரும் கல்லூரி தோழிகள். தாராவிற்கு அவளது முறைப் பையனை திருமணம் செய்ய வீட்டில் ஏற்பாடு செய்கிறார்கள். வேறு ஒருவனை விரும்பும் தாரா திருமணத்திற்கு முதல் நாள் வீட்டிற்கு தெரியாமல் தன் காதலை திருமணம் செய்து கொள்கிறாள்.

தாராவிற்கு நிச்சயம் செய்த நரேந்திரனின் குடும்பமும் நித்திலாவின் குடும்பமும் நண்பர்கள். இரு குடும்பமும் நித்திலவிற்கும் நரேனுக்கும்  திருமணம் செய்து வைக்கிறார்கள். சிறு வயதிலேயே நரேனை மனதார விரும்பியதால் நித்திலா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். தாராவின் துரோகத்தால் வெறுப்படைந்த நரேன், நிதிலாவிடம் இருவரும் நண்பர்களா கவே இருக்கலாம் என்கிறான்.

கொஞ்ச நாட்களில் நித்திலாவின் செயல்களால் ஈர்க்கப்பட்ட நரேனும் அவளை விரும்பத் தொடங்குகிறான். நரேனின் தங்கை விந்தியாவின் வாழ்வில் அவளது காதலன் கிஷோர் வடிவில்  ஒரு புயல் வீசுகிறது. இதனால் நரேன் நித்திலாவின் வாழ்க்கையில் விரிசல் ஏற்படுகிறது. விந்தியாவின் நிலை என்ன ? நித்திலா நரேன் இருவரும் அவர்களுக்கிடையில் இருந்த நேசத்தினை உணர்ந்து கொண்டார்களா என்பதை நாவலை  அறிந்து கொள்ளுங்கள்.