என் அன்பே
Written by Selvi on 6:27 PMபொன்னி தனது பணக்காரப் பெற்றோர்களை இழந்து சித்தியின் பராமரிப்பில் வளர்கிறாள். தனது டாக்டர் கனவினை மறந்து நர்சிங் கோர்ஸ் முடித்து விட்டு நவநீதன் மருத்துவமனையில் பணிபுரிகிறாள். சித்தி மீனலோசிநியோ பொன்னியை பாச வலையில் சிக்க வைத்து அவளது சொத்தின் மூலம் தனது பிள்ளைகளுக்கு வாழ்க்கையை அமைத்து தருகிறாள்.
பொன்னிக்கு ஆவலுடன் பணியாற்றும் ரேவதி எவ்வளவோ அறிவுரை கூறியும் ஏற்க மறுக்கிறாள். மெடிக்கல் ரெப்பாக பணிபுரியும் ஸ்ரீகாந்தும் பொன்னியும் காதலிக்கின்றனர். இந்த விவரம் இரு வீட்டிற்கும் தெரிய வருகிறது. தங்கை அமுதாவின் திருமணம் முடிந்த பிறகே தன் திருமணம் என ஸ்ரீகாந்த் நினைக்கிறான். நித்யாவின் திருமணத்திற்காக பொன்னி ஆஸ்பிட்டலில் ஒரு லட்ச ரூபாய்க்கு லோன் போட்டிருந்தாள். ஸ்ரீகாந்தும் அமுதா திருமணத்திற்கு பொன்னியின் உதவியை நாடினான். ஆனால் அவளால் முடியவில்லை.
நித்யா, தனது பெற்றோர் எப்படியெல்லாம் பொன்னியை ஏமாற்றியுள்ளனர் என்பதை கூறக் கெட்ட பொன்னி அதிர்ந்து போகிறாள். இனி தன் வாழ்க்கையை தானே தீர்மானிப்பது என முடிவெடுக்கிறாள். ஸ்ரீகாந்தும் அமுதா திருமணம் மற்றும் சொந்தமாக பார்மசி வைப்பதற்காக பணம் ஏற்பாடு செய்கிறான். மேலும் தனது திருமணத்திற்குப் பிறகு வசிக்க ஒரு வீட்டையும் பார்த்து வைத்தான். எதிர்பாராத விபத்தில் சிக்கி ஸ்ரீகாந்த் பலியாகிறான். ஸ்ரீகாந்தின் தாய் பொன்னியை ஒரு தலையாக காதலிக்கும் டாக்டர் தினேஷை திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுகிறாள்.
| Posted in »

0 comments: Responses to “ என் அன்பே ”