Dec 2, 2013

kaathirukkiren rajakumara,,,

இந்த கதை நாயகி நயன தாராவின் மடந்தை பருவத்திலிருந்து தொடங்குகிறது. தனது தாத்தாவிற்கு சொந்தமான பழைய கால அரண்மனையில் கதை நாயகன் பிரகாஷை தற்செயலாக சந்திக்கிறாள். அவளது தோற்றத்தில் மயங்கி "ஐந்தாறு வருடங்கள் கழித்து வருகிறேன். என்னையே மணப்பாயா?  பிரின்சஸ் " என்று கேட்டு விட்டு செல்கிறான்.

நயன தாராவும் அதை உண்மை என்று நம்பி அவனுக்காக காத்திருக்கிறாள். சில வருடங்களுக்குப் பிறகு அவனையும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில்  சந்திக்கிறாள். பிரகாஷுக்கு அவளை ஞாபகம் இருந்ததா? அவர்கள் வாழ்வில் ஒன்று சேர்ந்தார்களா? என்பது சஸ்பென்ஸ். ஒரு சுவாரசியமான திரைப்படம் பார்த்தது போலிருந்தது இந்த நாவல்.