கணவனை இழந்த புஷ்பா தன் மகள் மஞ்சுளாவை செல்லமாக வளர்க்கிறாள். டெலிபோன் டிரெக்டரியில் உள்ள ஏதேனும் நம்பருக்கு டயல் செய்து குறும்பாக பேசுவது அவளது விளையாட்டு. டாக்டர். பிரபாகர் அவளது மாமா மகன். இருவரும் ஒருவரையொருவர் விரும்பினர்.
பிரபாகரனது மற்றொரு முறை பெண்ணான சியாமளாவும் அவனை விரும்பினாள். மஞ்சு விளையாட்டாக சக்தி என்பவனுக்கு போன் செய்து குறும்பாக பேசினாள். அவன் அவளது நம்பரை கண்டறிந்து தொல்லை கொடுத்தான். மேலும் பிரபாகரனிடம் மஞ்சுவை பற்றி தவறாக கூறினான். அவள் ஓரிருமுறை அபார்ஷன் செய்து கொண்டாள் எனவும் கூறினான்.
உண்மையை உணராத பிரபாகர் தன் அம்மாவின் விருப்பப்படி சியாமளாவை மணந்து கொண்டான். சக்தியின் சூழ்ச்சியால் அவளது அம்மாவும் அவளை தவறாக புரிந்து கொண்டாள். தாயின் மறைவுக்கு பிறகு ஒரு வெடி குண்டு விபத்தில் மஞ்சு மரணமடைகிறாள். போஸ்ட் மார்டத்திற்காக பிரபாகர் வேலை செய்யும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறாள். போஸ்ட் மார்ட அறிக்கையில் மஞ்சு கன்னி தன்மை மிக்கவள் என்பதை கண்டு தன் தவறை எண்ணி வருந்துகிறான். தன்னுடைய மகளுக்கு மஞ்சு என பெயரிடுகிறான்.
No comments:
Post a Comment