இச்சாதாரி எனும் பாம்பை மையமாக கொண்ட கதை இது. கதையில் தீர்த்த மலை கவுண்டர் காட்டில் வேட்டைக்கு சென்ற போது இச்சாதாரி பாம்புகளில் ஒன்றை சுட்டு கொன்றார்.
அன்றே பாம்பு கடித்து இறந்தார். அதன் பின் வரிசையாக அவரது மனைவி, மூத்தமகனது குடும்பம் மற்றும் இளைய மகன் திருப்பதி சாமி கவுண்டரின் மூத்த மகன் அவினாசிலிங்கம் என அனைவரையும் பாம்பு கடித்து கொன்றிருந்தது.
திருப்பதி சாமி கவுண்டரின் குடும்ப வைத்தியர் மாசிலாமணி, நாக மாணிக்க மோதிரம் அணிந்து கொண்டால் இச்சாதாரி நெருங்காது. தானே அதை செய்து தருவதாக கூறுகிறார். அதன் படி வண்ண முத்து என்பவனின் உதவியுடன் அதனை திருப்பதி சாமி கவுண்டரின் மகன் நாகராஜுக்கு கொடுக்கிறார். பதிலாக கவுண்டர் சொத்தில் பாதியை கேட்கிறார்.
நாகராஜ் வைத்தியரை சந்தேகிக்கிறான். பார்த்திபன் என்பவன் தனது உருவமெடுத்து சென்ற இச்சாதாரி அவினாசிளிங்கத்தை கடித்ததன் விவரமறிய அக்கிராமத்துக்கு வருகிறான். ஜெயந்தன் எனும் நிருபரும் இச்சம்பவங்களின் உண்மையை கண்டறிய வருகிறான்.
ஜெயந்தன் மற்றும் வைத்தியர் இருவரும் ஒருவரையொருவர் சந்தேகிக்கின்றனர். இறுதியில் ஷியான் எனும் சீனக்காரரின் உருவில் வந்த அந்த பாம்பு நாகராஜை கொன்று அவனது உருவெடுக்கிறது.
No comments:
Post a Comment