அகிலா-கோகுல் தம்பதிக்கு திருமணமாகி பத்து வருடங்களாகின்றன.இன்னும் குழந்தை இல்லை. ஜோசியர் ஒருவர் கூறியபடி ராமேஸ்வரம் செல்ல முடிவெடுக்கின்றனர். கடந்த நான்கு தினங்களாக லட்சத்து பத்தாயிரம் எனும் வார்த்தை அடிக்கடி கோகுலின் காதில் விழுகிறது.
ராமேஸ்வரம் சென்று திரும்பியதும் அவர்களது வீட்டில் திருடு போய் உள்ளதை அறிகிறார்கள். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கின்றனர். திருடு போன பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் லட்சத்து பத்தாயிரம் ரூபாய். மேலும் இரு தினங்களாக ஐந்து லட்சம் எனும் வார்த்தை அடிக்கடி விழுவதை எண்ணி அதிர்ச்சி அடைகிறான்.
கோகுல் மறைந்த தனது நண்பன் சங்கரனின் மகன் பாலுவை கோவிலில் சந்திக்கிறான். கோகுல் சங்கரன் இறக்கும் முன் அவனிடம் வாங்கிய ஐம்பதாயிரம் ரூபாயை இன்றைய வங்கி மதிப்பிற்கு ரூபாய் லட்சத்து பத்தாயிரமாக பாலுவிடம் கொடுக்கிறான். கோகுல் சங்கரா லாட்டரியில் முன்பு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு இவன் பங்கிற்கு ரூபாய் ஐந்து லட்சம் கிடைக்கிறது.
No comments:
Post a Comment