வெங்கடாஜலபதி கவுண்டர் அரிசி மில் கட்டுவதற்காக ஒரு தென்னந்தோப்பை வாங்குகிறார். தோப்பின் நடுவில் ஒரு பாம்பு புற்று உள்ளது. அதனை இடிக்க வேண்டாமென்றுஅனைவரும் எச்சரிக்கின்றனர்.
ஆனால் அவரது மகன் ராஜ்குமார் அதனை அலட்சியம் செய்து புற்றினை இடிக்க ஏற்பாடு செய்கிறான். புற்றின் அருகே பிச்சைக்கார தோற்றமுடைய ஒருவன் வசிக்கிறான்.
ராஜ்குமார் ஒரு விபத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறான். ஆஸ்பத்திரிக்கும் அந்த பாம்பு வந்து மிரட்டுகிறது. பிச்சைக்கார சாமியாரின் உதவியால் பாம்பு அங்கிருந்து அப்புறப்படுத்த படுகிறது. அங்கிருந்த போலீஸ்காரர் அவரை சந்தேகிக்கிறார்.
அன்றிரவு சிறையிலிருந்து வெளியே வந்த ராஜேந்தர் மற்றும் பிச்சைக்கார வேடத்திலிருக்கும் கோசல் ராம் இருவரும் அந்த பாம்பு புற்றில் மறைத்து வைத்திருக்கும் நாராயண விக்கிரகத்தை எடுக்க முயலுகின்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைக்கின்றனர்.
No comments:
Post a Comment