சிவகாமி தன் மகள் இதயாவிற்கு திருமணத்திற்கு வரன் பார்க்கிறாள். இதய தன் தாய் யாரை பார்த்து செலக்ட் செய்தாலும் ஓகே என்று கூறுகிறாள். ஆனால் இதயா தினேஷை காதலிக்கிறாள்.
சிவகாமி இறந்து போன தன் கணவனின் பதப்படுத்தப்பட்ட கண்களின் முன்பு சீட்டு குலுக்கி போட்டு மோகன் பிரசாத் எனும் டாக்டர் மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கிறாள்.
ஜெயச்சந்திரன் அலுவலக வேலையாக ஹைதராபாத்திற்கு புறப்படுகிறான். ஜமுனா எனும் பெண்ணை கொலை செய்தான் என்று போலீசார் அவனை கைது செய்கின்றனர். ஜெயச்சந்திரன் செய்யாத கொலையை செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்துகின்றனர். அவ்வாறு ஒத்துக்கொள்ளவிடில் அவனது மனைவி மற்றும் தங்கைக்கு வேறு விதமான கஷ்டங்கள் அனுபவிக்க வேண்டியது வரும் என்று போலீசார் மிரட்டுகின்றனர்.
இதயா தன் தந்தையின் கண்கள் மிதக்கும் அமில ஜாடியில் கருஞ்சிவப்பு நிற தீற்றளினை சுரண்டி எடுத்து சோதனைக்கு அனுப்புகிறாள். இதயா, தினேஷை விரும்புவதை தெரிந்த சிவகாமி தன் மகளின் திருமண ஏற்பாடுகளை துரிதப்படுத்துகிறாள். இருவரும் பதிவு திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர். பரிசோதனையில் அது ரத்தம் மற்றும் எ.பி நெகடிவ் குரூப் என தெரிய வருகிறது.
ஜெயச்சந்திரன் போலீசின் மிரட்டலுக்கு பயந்து கொலை செய்ததாக ஸ்டேட்மென்ட் தர சம்மதிக்கிறான். பின் இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு தப்பி செல்கிறான். டாக்டர்களான நறுமுகை மற்றும் அவளது அப்பா சண்முகராஜ் இருவரும் தலையில் அடிபட்ட அவனை காப்பாற்ற முயலுகின்றனர்.
இதயா தன் அம்மாவுக்கு தெரியாமல் வீட்டிலிருந்து கிளம்புகிறாள். ஆனால் தினேஷ் வரவில்லை. அவளது அம்மா மோகன் பிரசாத்தை தான் திருமணம் செய்ய வேண்டுமென்று வற்புறுத்துகிறாள். இதயா சோதனைக்கு கொடுத்த ரத்தத்தை பற்றி போலீஸ் விசாரிக்கிறது.
சட்ட விரோதமாக வீட்டில் வைத்துள்ள தனது அப்பாவின் கண்களை அப்புறப்படுத்த படப்பையிலுள்ள கெஸ்ட் ஹவுஸ் செல்லுகிறாள். மோகன் பிரசாத் அவளை பின் தொடர்கிறான். ஆனால் அந்த கண்ணாடி ஜாடி காணாமல் போய் விடுகிறது. இதயா கண்ணாடி பாட்டிலை எடுத்து சென்றவளை கண்டுபிடிக்க முயலுகின்றாள். மோகன் பிரசாத் அவளுக்கு உதவுகிறான்.
தமிழரசி தான் ஒரு நிருபர் எனக் கூறி வல்லப் என்பவனுடன் ஜெயச்சந்திரன் அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று அவனை கொலை செய்ய முயலுகின்றனர். அந்த போராட்டத்தில் ஜெயச்சந்திரன் மார்பில் குண்டு பாய்ந்து கட்டத்தில் இருக்கிறான். சாகும் முன் தன் மனைவி மற்றும் தங்கையை பார்க்க நினைக்கிறான். அவர்கள் வருமுன் இறந்துவிடுகிறான். சுந்தரி நறுமுகையிடம் தன் கணவனின் கண்கள் தனக்கு வேண்டுமென்று கேட்கிறாள். அவனது இரு கிட்னியும் வேதவல்லி, தியாகராஜன் இருவருக்கும் பொருத்தப்படுகிறது.
தினேஷ் தான் கடத்தப்பட்டுள்ளதாக இதயாவினை தொடர்பு கொண்டு கூறுகிறான். கண்ணாடி பாட்டிலை எடுத்து சென்ற வேதவல்லி இதயாவையும் தன் வீட்டிற்கு அழைத்து வருகிறாள். அவளது தந்தை ஜெயச்சந்திரன் இறக்க காரணமாயிருந்ததினேஷின் தந்தை எனவும் அவருக்கு அஹிம்சா முறையில் தண்டனை கொடுத்து வருவதாகவும் கூறுகிறாள்.
No comments:
Post a Comment