Aug 20, 2008

ஒளிவதற்கு இடமில்லை

ரேணுகா தன் வீட்டில் நடக்கும் குழப்பங்களுக்கு விடை காண ரமணனின்உதவியை கோருகிறாள். ஆனால் ரமணன் அல்ல நஞ்சுண்டன் என்பது அவளுக்கு தெரியாது.
ரேணுகாவின் அக்கா சுகுமாரிக்கு டாக்டர் பாலச்சந்தரிடம் செய்து கொண்ட டான்சில் ஆபரேசனால் குரல் வளம் பாதிக்கப்பட்டிருக்கிறாள். டாக்டர் நாமகிரி ரேணுகாவின் தந்தை குழந்தை பாண்டியனின் பாரிச நோய்க்கு வைத்தியம் பார்க்கிறார். இவரது சொந்த ஊரான பாபநாசத்தை சேர்ந்த மைனர் சகோதரர்கள் தங்கள் குடும்ப சொத்தான வைர முருகனை குழந்தை பாண்டியனிடம் கொடுத்து வைத்துள்ளனர்.
சுகுமாரி கொலை செய்யப்படுகிறாள். பழி டாக்டர் பாலச்சந்தரின் மீது விழுகிறது. நஞ்சுண்டன் வைர முருகனை அபகரிக்க எண்ணுகிறான். ஒரு சீன கும்பலும் நஞ்சுண்டன் மூலமாக வைர முருகனை கைப்பற்ற எண்ணுகிறது. மைனர் சகோதரர்கள் குழந்தை பாண்டியனின் ஆலோசனைப்படி அவர்களது சகோதரியான டாக்டர். நாமகிரியிடம் ஒப்படைக்கின்றனர். நஞ்சுண்டன் வைர முருகனை கைப்பற்றி பதிலாக போலி வைர முருகனை ரமணன் வீட்டில் வைக்கிறான்.
இறுதியில் ரமணன் சுகுமாரியை கொலை செய்தது மற்றும் வைர முருகனை கைப்பற்றியது நஞ்சுண்டன் என்பதை அனைவருக்கும் நிருபிக்கிறார். வைர முருகனை குறிப்பிட்ட கோணத்தில் பார்க்கும்போது கண் பார்வை பாதிக்கும் என்பதை அறியாத நஞ்சுண்டனின் கண் பாதிக்கப்பட்டு மேலிருந்து கீழே விழுந்து இறக்கிறான்.

1 comment:

Anonymous said...

இக்கதை குமுதத்தில் டி.துரைசாமி என்கின்ற புனை பெயரில் தொடராக வந்தது.
பரத்