பரணி தனது பார்ட்னர் கருணாகரனுடன் சேர்ந்து பிஸ்னஸ் செய்கிறான். தனது குடும்ப டாக்டர் பஞ்சவர்ணத்திடம் அவரது நர்சிங் ஹோமில் ரெண்டு மாதம் அசைய முடியாத பேஷண்டாக தான் தங்க அனுமதிக்க வேண்டுமென்றும் அதற்குப் பதிலாக ரெண்டு லட்சம் ரூபாய் தருவதாக கூறுகிறான்.
அவ்வாறு தங்கும் போது தன்னுடைய விரோதிகளான வருமான வரி அதிகாரி அகர்வால், நடிகை சுனந்தா மற்றும் ஆடிட்டர் தேவ ராஜ் ஆகியோரை தீர்த்து கட்ட திட்டமிடுகிறான். திட்டமிட்டப்படி ஆஸ்பிட்டலில் அனுமதிக்கப்படுகிறான்.
ஒரு நாள் நள்ளிரவு அகர்வாலை கொள்ள அவர் வீட்டுக்கு செல்கிறான். ஆனால் அதற்கு முன் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். அதிர்ச்சியுடன் ஆஸ்பத்திரிக்கு வருகிறான். இரு நாள் கழித்து நடிகை சுனந்தவை செல்கிறான். பரணி ரோட்டில் கொல்லப்பட்டு கிடக்கிறான். பரணியின் திட்டத்துக்கு உடந்தையாக இருந்ததால் டாக்டர் கைது செய்யப்படுகிறார். பரணியின் கொலையை விசாரிக்க விவேக் அவன் வீட்டுக்கு செல்கிறான். வீட்டில் டெலிபோன் டைரக்டரியில் சங்கேத குரியிட்டிலிருந்த நம்பெரை வைத்து குற்றவாளியை கண்டு பிடிக்கிறான். குற்றவாளி பரணி மனைவி கிருபாவின் காதலன்.
No comments:
Post a Comment