Aug 27, 2008

உன் பார்வை நான் அறிவேன்

ஆறு கல்லூரி மனைவிகளை கடத்தி கற்பழித்து கொன்றவர்களில் ஒருவனான விசாரணை கைதி கௌதம் சிறையில் தற்கொலை செய்து கொள்கிறான். இவ்வழக்கை விசாரிக்கிறார் க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் இன்பாசாகர் . காவல் துறை அமைச்சர் திருமலை சாமிக்கு பதவி விலகுமாறு ஒரு மிரட்டல் கடிதம் வருகிறது.
அமைச்சருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறார் இன்பாசகர். ஆயினும் அமைச்சர் மூளை நரம்புகள் பாதிக்கப் பட்டு ஜடமாகிறார். அமலானந்த சுவாமிகளுக்கும் இது போல ஒரு மிரட்டல் கடிதம் வருகிறது. இன்பாசாகர் சுவாமிகளின் ஆசிரமத்திற்கு சென்று விசாரிக்கிறார். பின் அங்கு குண்டு வெடிப்பு நிகழ்கிறது.
மேலிட பிரஷரின் காரணமாக இவ்வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்படுகிறது. இன்பசாகர் சி.பி.ஐ. ஆபிசர் முன்ஷியை கடத்தி செல்கிறார். ஆறு பேரில் ஒருவராக தன்னுடைய காதலி பிரபாவையும் கடத்தி சென்று கற்பழித்து கொன்றதற்காக அதற்கு தொடர்புடைய அமைச்சர் மற்றும் சுவாமிகளையும் தான் தான் கொன்றதாக இன்பசாகர் கூறுகிறார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடையவர்களின் பெயர் விவரங்களை முன்ஷியிடமிருந்து பெறுகிறார் இன்பசாகர்.

No comments: