Aug 28, 2008

ஆயுள் ஆயிரம் நாள்

எம்.எல்.ஏ ராஜரத்தினத்திற்கு ஒரு மிரட்டல் கடிதம் வருகிறது. அதில் அவருக்கு ஆயுள் இன்னும்ஆயிரம் நாள்கள் மட்டுமே என்றும் அதற்குள் அவர் கொல்லப்படுவார் என்றும் எழுதி இருக்கிறது. இன்ஸ்பெக்டர் கனகராஜ் கடிதம் எழுதியவரை கண்டுபிடிப்பதாக கூறுகிறார்.
குமார் மிகவும் நேர்மையான பேர்வழி. அவனை காதலிப்பதாக கூறும் சந்தியா ஒரு நிதி நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறாள். பின் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். குமாரை ராஜா ரத்தினத்தை கொலை செய்யும் கருவியாக்க சந்தியாவும் சேது ராமும் திட்டமிடுகின்றனர்.
ராஜரத்னம் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டரும் ராஜரத்னதின் பி.ஏ வான பிரசாத்தும் செல்கின்றனர். கொலை நடந்த இடத்தில் இருந்த குமாரையும் சந்தியாவையும் விசாரிக்கின்றனர். குமார் தான் அந்த கொலையை செய்ய வில்லை என கூறுகிறான். இன்ஸ்பெக்டருக்கு சந்தியாவின் மீது சந்தேகம் வருகிறது.
இறுதியில் ராஜரத்னதின் பி. ஏ பிரசாத் தான் கொலையை என்று கண்டுபிடிக்கிறார். அவன் கொலையை செய்து விட்டு வென்டிலேட்டர் வழியாக தப்பி செல்லும் முன் அவனுடைய சட்டையின் நூல் அதில் மாட்டிக் கொண்டு இருந்தது.

No comments: