Aug 27, 2008

இது தான் சொர்க்கம்

உதய குமார் மற்றும் வித்யா தங்களுடைய திருமண நாளை முன்னிட்டு கடைக்கு சென்று பட்டு சேலை வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்புகின்றனர். வீட்டு கதவு திறக்கப்படிருக்கிறது. உள்ளே பாத் ரூமில் ஒரு பெண்ணின் பிணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். அப்பிணத்தை அப்புறப்படுத்த நினைக்கிறார்கள்.
இதை கண்டு பிடித்த இன்ஸ்பெக்டர் அவர்களை மிரட்டுகிறார். மர்ம மனிதன் ஒருவனும் அவர்கள் பிணத்தை அப்புறப்படுத்தியதை போட்டோ எடுத்துள்ளதாக பணம் கேட்டு மிரட்டுகிறான். இருவரும் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறார்கள். அதன் படி இருவரும் தனித்தனியாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் அருந்துகிறார்கள். இது அனைத்தும் உதய குமாரின் நாடகம் என்பதை அறியாத வித்யா இறந்து விடுகிறாள். மூன்று மாதங்கள் கழித்து உதய குமார் பிணமாக நடித்த தனது காதலி வனிதா ராணியை திருமணம் செய்து கொள்ளுகிறான்.
வனிதா விட்த்யவின் போட்டோ வீட்டில் இருக்க கூடாது என்று சண்டை போடுகிறாள். கோபத்தில் உதய குமார் வந்தவை அடித்து விடுகிறான். முன் பகையின் காரணமாக அவன் வீட்டில் வேலை பார்த்த வாட்ச் மென் வனிதா ராணியை கொலை செய்கிறான். பழி உதய குமாரின் மீது விழுகிறது.

No comments: