Aug 26, 2008

விலகு விபரீதம்

ராதிகா ராம்ஜே நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். அகமது எனும் வாலிபரை காதலிக்கிறாள். ஒரு நாள் மதியம் அவளது அப்பா ஆசிரியர் சிவசாமி அவளை பெண் பார்க்க மாலை மாப்பிள்ளை வீட்டார் வருவதால் சீக்கிரம் வருமாறு கூறுகிறார். ஆனால் அன்று ராதிகா வீடு திரும்பவில்லை.
நகரில் அடிக்கடி வழிப்பறி நடக்கிறது. அதனை கண்டித்து முன்னால் எம்.எல்.ஏ ரவீந்திரன் உண்ணாவிரதம் இருக்கிறார். சப். இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் ராதிகாவுடன் வேலை பார்த்த உஷாவை விசாரிக்கிறார்.அவள் கூறியதன் பேரில் ரெக்கார்ட் ரூமில் பார்க்கிறர்கள். ராதிகாவுடன் ஒரு வாலிபரும் இறந்து கிடக்கிறான். அந்த இளைஞன் திருவனந்தபுரத்தை சேர்ந்தவன் என்றும் பணம் டெபாசிட் செய்ய அந்நிறுவனத்திற்கு வந்திருந்தான் என்றும் தெரிந்தது.
ராதிகா இறந்ததை அறிந்த அஹ்மதும் தற்கொலை செய்ய நினைக்கிறான். ராதிகாவையும் நாராயணனையும் கொன்ற வழிப்பறி திருடர்கள் பேசுவதை தற்செயலாக கேட்கிறான். இதற்கு மூல காரணம் முன்னால் எம்.எல்.ஏ ரவீந்திரன் என்பதையறிந்து அவரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளுகிறான்.

No comments: