Aug 29, 2008

உத்தம திருடி

ராகினி, சீதா, மல்லிகா மற்றும் ரேவதி ஆகியோர் நெருக்கமான தோழிகள். இதில் ராகினி அந்த ஊரின் பண்ணையார் மகள். சீதா கணக்கு பிள்ளையின் மகள். சீதா ராகினியின் அண்ணன் விஜயனை காதலிக்கிறாள். மல்லிகா மற்றும் ரேவதியும் அவன் மீது ஒரு கண் வைத்துள்ளனர்.

இதனையறிந்த ராகினியின் தாய் தேவகியம்மாள்விஜயனுக்கு தன் அண்ணன் மகளை மணமுடிக்க எண்ணுகிறாள். ராகினி தன் உயிரை கொடுத்தேனும் சீதாவுக்கு தன் அண்ணனை மணமுடிப்பதாக கூறுகிறாள்.

சீதாவின் தந்தை அவளுக்கு தன் நண்பனின் மகனான பிரசாத்தை மணம் முடிக்க எண்ணுகிறார். சீதா பிரசாத்திடமே அவனை பிடிக்கவில்லை என்று கூறுகிறாள். திருவிழா பார்க்க சென்ற ராகினி மற்றும் சீதாவை பிரசாத்தின் நண்பர்கள் கடத்தி செல்கின்றனர்.

இரு தினங்களுக்குப் பிறகு ராகினி மற்றும் சீதாவை உயிருக்கு போராடும் நிலையில் கண்டுபிடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கின்றனர். ராகினியை சிதைக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. ராகினி இறந்து விடுகிறாள். ராகினியின் நிலை தான் சீதாவும் அடைந்திருப்பாள் எனக் கருதி சீதாவுக்கு வால்வளிக்கிறான் விஜயன்.

No comments: