Sep 1, 2008

என் மனைவி

டாக்டர் ராம் பிரகாஷ் - வத்சலா திருமணம் விமரிசையாக நடக்கிறது. ராம் பிரகாஷிடம் ராஜாராமன் வத்சலா தன்னுடைய மனைவி என்று தன் திருமண அழைப்பிதழை காட்டுகிறான். ராம் பிரகாஷ் அவனை தனது வீட்டிற்கு வரச் சொல்லுகிறான். வத்சலாவோ அவனை முன்பின் அறியாதவளாக பழகுகிறாள். இருவரும் வத்சலாவின் பெற்றோரிடம் செல்கின்றனர்.
வத்சலாவின் பெற்றோர் ராஜாராமன்-வத்சலா திருமண நிச்சயத்திற்கு பின் நடந்த விபத்தில் அவளுக்கு தலையில் அடி பட்டு பழைய நினைவுகள் மறந்து விட்டது என கூறுகிறார்கள். ராஜாராமன் தான் வத்சலாவின் வாழ்க்கையிலிருந்து விலகி செல்ல ரூ. இருபதாயிரம் வேண்டும் என கூறுகிறான்.
அட்வான்சாக ரூ. ஆயிரம் வாங்கி கொள்கிறான். மீதியை அவன் தங்கியிருக்கும் ஹோட்டலில் கொண்டு வந்து கொடுக்குமாறு ராம் பிரகாஷிடம் கூறுகிறான். மறு நாள் ராம் பிரகாஷ் ஹோட்டலுக்கு சென்ற போது ராஜா ராமன் அங்கு கொலை செய்யப்பட்டிருந்தான்.
அப்போது அங்கு ரூமை காலி செய்வதாக பிள்ளை செட்டில் செய்து கொண்டிருந்தான். அவன் கொடுத்த நூறு ரூபாய் நோட்டின் வெள்ளை பக்கத்தில் ராம் பிரகாஷ் வத்சலா திருமணத்திற்கு வாழ்த்து சொல்லி எழுதி இருந்தது. அது ராம் பிரகாஷ் ராஜா ராமனுக்கு கொடுத்த ரூபாய் நோட்டுகளில் ஒன்று. பணத்துக்காக அவன் ராஜாராமனை கொலை செய்தது தெரிய வந்தது.

No comments: