Sep 4, 2008

மல்லிகை மனசு

கோதாவரி பெங்களூரிலிருந்து தன்னுடைய ஆபிசுக்கு ட்ரான்ஷ்பராகி வந்த காவ்யாவை தன் வீட்டில் தங்க வைக்கிறாள். காவ்யாவின் டைரியில் தனது கணவன் விக்னேஷின் போட்டோவை தற்செயலாக பார்க்கிறாள். காவ்யாவின் மகள் மாதுளா அது தனது டாடி என கூறியதும் அதிர்கிறாள்.
கோதாவரி காவ்யாவிடம் விசாரிக்கிறாள். விக்னேஷ் போலி எம்.பி.ஏ சான்றிதழ் மூலம் பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறான். இதனை அறிந்த காவ்யா அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு அவனது தகுதிக்கேற்ப ஒரு வேலையை பார்க்க சொல்லுகிறாள். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறுகிறாள். கோதாவரி விக்னேஷ் தனக்கும் கணவன் என்று கூறுகிறாள்.
கோதாவரி தன்னுடைய அம்மா அனுமதிக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரியில் முதன் முதலாக விக்னேஷை சந்திக்கிறாள். அவனுடைய நல்ல குணத்திற்காக ஒரு கம்பெனியில் வேலைக்கு சிபாரிசு செய்கிறாள். பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆபீஸில் பில்லை பாஸ் செய்ய லஞ்சம் வாங்குகிறான். அந்த பணம் கள்ள நோட்டு எனத் தெரிந்து விக்னேஷ் வேலைக்கு ஆபத்து வருகிறது.
அவனது ஜி.எம், விக்னேஷின் மனைவி தனது ஆசைக்கு இணங்கினால் இந்த பிரச்சினையிலிருந்து அவனை காப்பாற்றுவதாக கூறுகிறான் அதன்படி ஒருநாள் கோதாவரிக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுக்கிறான். அவன் மீது சந்தேகம் கொண்ட கோதாவரி அந்த பாலை அருந்தாமல் நடிக்கிறாள். பின் அங்கு வந்த ஜி.எம்முடன் நடந்த போராட்டத்தில் அவரை தள்ளி விடுகிறாள். அவர் தலையில் அடிபட்டு இறந்து விடுகிறார்.
கோதாவரி சிறை தண்டனை பெற்று திரும்பியதும் விகேஷ் தனக்கு எழுதிய கடிதத்தை படிக்கிறாள். அதில் அவன் தனக்கு மன்னிப்பே கிடையாதெனவும் அவள் கண்ணில் படாமல் எங்கோ செல்வதாக எழுதி இருந்தான். கோதாவரி காவ்யா மற்றும் மாதுளா மூவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.

No comments: