விஜய், கோடீஸ்வரர் விக்னேஷின் ஒரே பிள்ளை. செல்வ செழிப்பின் காரணமாக தறி கேட்டு போயிருந்தான். அவனுடைய நண்பன் ரமணியின் திருமண அழைப்பிதழில் மணமகள் ஹேமாவின் போட்டோவைப் பார்த்து மயங்கி அவளை அடைய நினைக்கிறான்.
ஹேமா டி.எஸ்.பி துர்க்காவதியின் மகள். துர்க்காவதி தனது நேர்மையான நடவடிக்கையால் நகரில் பல வி.ஐ.பி களுக்கு எதிரியாகிறாள். திருமண அழைப்பிதழ்கொடுக்க சென்ற ஹேமாவை கடத்தி வந்து பலாத்காரம் செய்கிறான். அங்கு நடந்த போராட்டத்தில் ஹேமாவின் தலையில் காயம் ஏற்படுகிறது. அந்நேரத்தில் விஜயின் ஆசை நாயகி ரேகா அங்கு வருகிறாள்.
அவளை சமாளித்து விட்டு ஹேமாவை அப்புறப்படுத்துகிறான். ஹேமாவிற்கு
சிகிச்சையளித்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். ஹேமா ரமணியிடம் நடந்த அனைத்தையும் கூறி தன்னை நாசம் செய்தவனை கண்டுபிடிக்க உதவி கேட்கிறாள். ரேகா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விஜயை மிரட்டுகிறாள். இருதியில் ரமணி ஹேமாவை நாசப்படுத்தியது விஜய் என்று கண்டுபிடிக்கிறான். ரேகா விஜயை சுட்டு கொன்றுவிடுகிறாள்.
No comments:
Post a Comment