Sep 11, 2008

உயிரில் கலந்த உறவே

இந்நாவல் திருச்செந்தூரை முக்கிய களமாக கொண்டது. திருச்செந்தூரை பற்றியும் அங்கு குடி கொண்டுள்ள செந்திலாண்டவனைப் பற்றியும் பல அறிய தகவல்களை நாவலாசிரியர் நமக்கு அளித்துள்ளார்.
எழுத்தாளர் சுந்தரமும் மகாதேவனும் நண்பர்கள். சுந்தரம் மகாதேவனின் தங்கை பாரதியை விரும்புகிறார். ஆனால் பாரதியோ பைனான்ஸ் நடத்தும் பெரிய பணக்கரான பாலகோபலின் மகன் மனோகரை விரும்புகிறாள்.
இவர்களது காதல் விவரம் தெரிந்த மனோகரனின் தந்தை வீட்டை விட்டு அனுப்புகிறார். இருவரும் சுந்தரத்திடம் தஞ்சம் புகுகின்றனர். சுந்தரம் மனோகருக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்து மகாதேவனிடம் பேசி திருமணத்தை முடித்து வைக்கின்றார்.
இந்நிலையில் பாலகோபலின் எதிரி தேனிலவுக்கு கொடைக்கானல் சென்ற மனோகரை கொன்று பழியை அவனது தந்தையின் மீது போடுகிறது. இந்த கதையில் வரும் சாமியார் கூறியதன் பேரில் சுந்தரம் பாரதியை மனம் செய்து கொள்கிறான். மீண்டும் தேனிலவுக்கு கொடைக்கானல் செல்கின்றனர். அங்கு இறந்து விட்டதாக கருதிய மனோகரனை மன நலம் சரியில்லாத நிலையில் சந்திக்கின்றனர்.

No comments: