Sep 11, 2008

அங்கே நான் நலமா?

நந்த குமார் சினிமா துறையில் தான் ஒரு ஹீரோவாக வர வேண்டுமென்று கனவு காண்கிறான். அதன்படி ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அவனது முறைப் பெண் நளினி. நந்தகுமாருக்கு நளினி என்று சின்ன வயதிலே முடிவு செய்யப்பட்டது.

நந்த குமாரின் சினிமா ஆசையால் அவனுக்கு கிடைத்த கவர்மென்ட் வேலையை நிராகரிக்கிறான். அவனது நடவடிக்கை மாறுகிறது. நளினியை உதாசீனப்படுத்துகிறான். ஷூட்டிங்குக்காக ஒரு மாதம் வெளி நாடு செல்ல நேரிடுகிறது. அவனது தாய் நளினியையும் உடன் செல்லுமாறு கூறுகின்றார். ஆனால் அவன் வழியனுப்ப கூட யாரும் வருவதை விரும்பவில்லை.

மேலும் தான் சினிமாவில் தொடர்ந்து நடிக்க போவதாகவும் தனக்கு திருமணம் வேண்டாமென்றும் கூறுகிறான். அதனால் நளினிக்கு வேறு மாப்பிள்ளை பார்க்குமாறும் கூறுகிறான். அதைக் கேட்ட நந்தினி தற்கொலைக்கு முயல்கிறாள். இந்த அதிர்ச்சியில் நந்த குமாரின் தாய் இறந்து விடுகிறாள்.

நந்தகுமார் தன்னுடன் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் சாருலதாவை திருமணம் செய்து கொண்டதாக போட்டோ எடுத்து ஊருக்கு அனுப்புகிறான். நளினியின் வீட்டாரும் நந்தகுமாரின் அப்பாவும் நளினிக்கு வேறு இடத்தில் மணமுடிக்கின்றனர். அனைவரும் நந்தகுமாரை வெறுக்கின்றனர். நந்தகுமார் அந்த படத்தின் கிளைமாக்ஸ் சீனில் டூப் போடாமல் நெருப்பில் விழுந்து இறக்கிறான்.
தனக்கு வந்த எயிட்ஸ் நோய் யாருக்கும் தெரியக்கூடாது என அனைவரும் வெறுக்கும்படி நடித்த நந்த குமாரை நினைத்து சாருலதா வருந்துகிறாள்.

No comments: