Sep 18, 2008

சேது நாட்டு வேங்கை

காசிக்கு அடுத்து பாவம் போக்கும் புண்ணிய தலமாககருதப்படும் ராமேஸ்வரம் அமைந்திருக்கும் சேது நாட்டைப் பற்றியும் அதனை ஆண்ட கிழவன் சேதுபதியின் வரலாற்றை விளக்கும் நாவல் இது.
தசரதனுக்கு அடுத்தப்படியாக அதிக மனைவிகளை கொண்டிருந்தவர் கிழவன் சேதுபதி. மதுரை நாயக்கர், ஒரு குதிரைக்காரனான ரும்ச்தம்கானின் வஞ்சகப் பிடியில் சிக்குகிறார். இதனால் மதுரை. நகரமே அவனது கட்டுக்குள் வருகிறது. மதுரையின் தளவாய் கோவிந்தப்பைய்யா கிழவனின் உதவியை நாடுகிறார். கிழவன் ரும்ச்தம்கானை கொன்று மதுரையை மீட்டு கொடுக்கிறார். அவருக்கு நாயக்கர் "பரராஜ கேசரி" எனும் பட்டதை அளிக்கிறார். மேலும் குமாரப் பிள்ளையை உயிர்ப்பரிசாக கிழவனுக்கு வழங்குகிறார்.
இராண்டுகளுக்குப் பிறகு மைசூர் தளபதி மதுரையின் மீது படையெடுக்கிறார். நாயக்கரின் மகன் முத்து வீரப்பன் கிழவனிடம் உதவி கேட்க கூடாது என நினைக்கிறான். ஆனால் கிழவன் நாளை வரக் கூடிய பெரிய யுத்தத்தை தவிர்க்க மதுரைக்கு துணையாக போரிட்டு மைசூரை வீழ்த்துகிறார்.
இறுதியில் சொக்கநாத நாயக்கர் கிழவன் செய்த உதவிக்கு நன்றியாக தனது நவரத்ன மோதிரத்தை குமார பிள்ளை மூலம் அவருக்கு அளிக்கிறார்.

No comments: