Sep 22, 2008

மனம் விரும்புதே உன்னை

கிருத்திகாவை பெண் பார்க்க கிராமத்தான் பரமு வருகிறான். கிருத்திகாவோ முன்பு தன்னை பெண் பார்க்க வந்த துபாய் மாப்பிள்ளை ஜெகனை நினைத்து உருகுகிறாள். பிருந்தா தன் அக்கா கிருதிகாவிற்காக பரமுவை திருமணம் செய்து கொள்கிறாள்.

கிருத்திகா தான் நினைத்தபடியே ஜெகனை திருமணம் செய்து கொள்கிறாள். ஜெகனும் அவளது குடும்பத்தவர்கள் அனைவருக்கும் வெளி நாட்டு பரிசு பொருட்களை அன்பளிப்பாக கொடுத்து தன் வசப்படுதுகிறான். பிருந்தா வசதிகளே இல்லாத தன் புகுந்த வீட்டையும் கிராமத்து கனவையும் வெறுக்கிறாள்.

தன் அக்கா கணவனின் மீது ஆசைப் படுகிறாள். அவனதுகம்பெனியில் வேலைக்கு சேர்கிறாள். இருவரும் சேர்ந்து ஊர் சுற்றுவது கிருத்திகாவிற்கும் பரமுவிற்கும் தெரிய வருகிறது. பிருந்தா தன் கணவனிடம் விவாகரத்து கோருகிறாள். இதற்கிடையில் ஜகன் பொது மக்களை ஏமாற்றி பணம் சேர்ப்பது தெரிய வருகிறது. மேலும் துபாயில் வேலை சிறைதண்டனை பெற்றதும் தெரிய வருகிறது.
இறுதியில் பரமு தன்னுடன் சேர்ந்து வாழுமாறு பிருந்தாவை அழைக்கிறான். ஆனால் பிருந்தா குற்ற உணர்ச்சியால் அதை marukkiraal.

No comments: