Sep 25, 2008

தங்க திரிசூலம்

கஜேந்திரன் தன் அம்மா லட்சுமியின் ஆசிர்வாதத்தோடு பிரபலமான வின்ட்மில் கம்பெனியில் ப்ராஜெக்ட் என்ஜினியராகவேலைக்கு சேர்ந்தான். கம்பெனியின் ஜி.எம். தாமஸ் பெர்சனல் மேனேஜரிடம் அனைத்தையும் எக்ஸ்ப்ளைன் செய்யுமாறு கூறினார். கம்பெனி வளாகத்தில் ஒரு மரத்தின் அடியில் திரிசூலம் ஒன்று இருப்பதையும் அதை அங்குள்ளவர்கள் தெய்வமாக வழிபடுவதையும் கண்டான். மேலும் கஜேந்திரன் அதை கேலி செய்தான்.

கஜேந்திரன் தன்னுடைய டிரைனர் அஜந்தாவிடமும் சூலத்தை பற்றி கேலியாக பேசிக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு சாமி வந்து அந்த சூலத்தால் கஜேந்திரனை குத்தி விடுகிறாள். தகவல் அறிந்த கஜேந்திரனின் தாய் ஆஸ்பத்திரியில் தன் மகன் பிழைக்க மாட்டானென்றும் இது தன் குடுமபத்திற்கு ஒரு பூசாரியின் சாபம் என்று புலம்புகிறாள்.

பின்னர் அஜந்தாவின் துணையுடன் அந்த சூலம் இருக்குமிடத்திற்குச் சென்று தன் மகனை காப்பாற்றும்படி வேண்டுகிறாள். கஜேந்திரனும் பூரண குணமடைந்து வீடு திரும்புகிறான். சில நாள்களுக்குப் பிறகு அவனது அலுவலக கேண்டினில் சாப்பாடு விலை உயர்வு காரணமாக யூனியனுக்கும் மநேஜ்மேண்டுக்கும் மோதல் ஏற்பட்டது. அதில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவன் அந்த சூலத்தால் கஜேந்திரனை குத்தி விட்டான்.

லட்சுமி இம்முறை தன் மகன் நிச்சயமாக பிழைக்க மாட்டானென்று கூறுகிறாள். காரணம் கெட்ட அஜந்தாவிடம் முப்பத்தைந்து வருடத்திற்கு முன்னால் வேலாயுதம்பாளையத்தில் தங்க மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக வேலை நடைபெற்று கொண்டிருந்தது. அவளது மாமனாரும் ஊர்தலைவருமான சிவந்ஜனம், அந்த கோவிலுக்கு காணிக்கையாக சிங்கப்பூர்க்காரர் அளித்த தங்க திரிசூலத்தை அபகரித்து பழியை கோவில் பூசாரி மேல் விழச் செய்தார்.
பூசாரி திரிசூலத்தை அபகரித்தவன் குடும்பத்தை அந்த சூலமே தண்டிக்கும் என்று கூறி ஆற்றில் மூழ்கி இறந்து விடுகிறார். அதன்படியே கஜேந்திரனின் தாத்தா, அப்பா மற்றும் அவனுடைய சித்தப்பா மூன்று பேரும் இறந்து விட்டதாக கூறுகிறாள். அஜந்தா அதற்குப் பரிகாரமாக அந்த திரிசூலத்தின் மதிப்பிற்கு பணத்தையோ அல்லது வேறொரு திரிசூலமோ செய்து காணிக்கையாக கோவிலுக்கு கொடுத்து விடலாம் என்று கூறுகிறாள். அதன் படி லட்சுமி முதலில் பழைய திரிசூலத்தை அளித்து செய்த தங்க பிஸ்கட்டுகளை பூசாரி மூழ்கிய ஆற்றில் போட்டு பூசாரியிடம் மன்னிப்பு கேட்கிறாள். மேலும் தன் மகன் பிழைத்து வந்த பிறகு அவன் கையால் தங்க திரிசூலம் செய்து காநிக்கையாகுவதாக வேண்டுகிறாள். அச்சமயம் கஜேந்திரன் உயிருக்கு ஆபத்து இல்லையென்றும் அவன் பிழைத்து விட்டதாகவும் போன் வருகிறது.



No comments: