விழாவின் போது ஈழ விடுதலை இயக்கத்தை சார்ந்தவர்கள் வைத்த பாமில் ஒரு எலக்ட்ரீசியன் இறந்து விடுகிறான். உத்தம் சிறிய காயத்துடன் உயிர் பிழைத்தான்.
ஒரு வாரத்திற்குப் பிறகு உத்தம் மற்றொரு வெடி விபத்தில் மாட்டிக் கொள்கிறான். சுமதி ஆஸ்பிட்டலில் அனுமதிக்கப் படுகிறான். கணேஷும் வசந்தும் பீனாவின் மீது சந்தேகம் கொள்ளுமாறு சூழ்நிலை உருவாகிறது.
பீனாவின் மீதும் கொலைத் தாக்குதல் நடை பெறுகிறது. அவளும் அதே ஆஸ்பிட்டலில் அனுமதிக்கப் படுகிறாள். அந்த சமயம் இந்தியாவுக்கு ஒரு செமினாருக்காக வந்திருக்கும் அந்த சொத்தின் பங்கு தாரர் ராஜா சந்திரனின் மீது சந்தேகம் கொண்டு விசாரிக்கின்றனர். ஆனால் அவரும் கொலை செய்யப் படுகிறார்.
இறுதியில் உத்தம் தான் சொத்திற்காக இவ்வாறெல்லாம் செய்தான் என்பதை கணேஷ் துப்பறிகிறார்.
No comments:
Post a Comment