ரேவதி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். வானில் பறவையைப் போல பறந்து செல்லும் விமானத்தை வேடிக்கை பார்ப்பது அவளது பொழுது போக்கு. பைலட்டாக வேண்டுமென்பது அவளுடைய ஆசை. அவளது அம்மா கல்யாணி," ரேவதி! ரேவதி! எங்கேடி இருக்கே? எனக்கு நேரமாகுது. பெரிய வீட்டுக்கு வேலைக்குப் போகணும். சீக்கிரம் வா! " என்று அழைத்தாள்.
ரேவதி, " இதோ வர்றேன்மா" என்று அவள் முன் நின்றாள். அம்மா பரீட்சைக்கு பணம் கட்டனும். நேத்தே சொன்னேனே என்றாள்.
கல்யாணி "சரி சரி இடைவேளையின் போது மீனாம்மா வீட்டுக்கு வா. அந்தம்மாகிட்ட நேத்தே சொல்லி வைச்சிருக்கேன். பணம் வாங்கித் தர்றேன். அடுத்த தெருவில் இருக்கும் சோப்பு கம்பெனியில் வேலைக்கு சொல்லி வைச்சுருக்கேன். நீ இந்த வருஷம் படிப்பு முடிஞ்சதும் சேந்துக்கலாம் " என்றாள்.
திடுக்கிட்ட ரேவதி,"அம்மா அம்மா நான் பெரிய படிப்பெல்லாம் படிக்கனும்மா! ப்ளேன் ஐ ஓட்டற படிப்பெல்லாம் படிக்கனும்மா " என்று கெஞ்சினாள்.
கல்யாணி," இருக்கிற நிலைமையில் அது ஒண்ணுதான் குறைச்சல். உங்க அப்பன் உன்னையும் என்னையும் அனாதையா விட்டுட்டு போயிட்டான். நான் நாலு வீட்ல வேலை செஞ்சா தான் மூணு நேர கஞ்சியே குடிக்க முடியும். நாம எல்லாம் பிளேனை தரையில் நின்னு பார்க்கத் தான் முடியும். அது கிட்டக் கூட போக முடியாது. " என்றாள்.
ரேவதி சிறிது நேரத்தில் வானில் பறந்த விமானத்தை ஏக்கத்துடன் பார்த்தப்படி நின்றாள்.
No comments:
Post a Comment