Oct 22, 2008

உயிரே உயிரே

அஷ்வின் சென்னை ராம நடராஜ தீட்சிதர் கூறியதன் பேரில் இடைக்கழிநாடு ஜோசியரை பார்க்க சென்றான். அவரிடம் தன் முதலாளி தொழிலதிபர் சந்திரமௌளிஷ்வரனின் ஜாதகத்தைக் கொடுத்து ஆயுள் பலம் பற்றி கேட்டான். அவர் தற்போது ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பிட்டலில் அனுமதிக்கப் பட்டிருப்பதையும் கூறினான்.
ஜோசியர் புஷ்ய நட்சத்திரத்தில் புஷ்பவதியான ஒரு பதினெட்டு வயதுப் பெண்ணை அவர் கல்யாணம் செய்து கொண்டால் பிழைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். அஷ்வினும் தனது முதலாளியம்மா பாரிஜாதத்திடம் சென்று விவரத்தைக் கூறினான். அவள் சந்திர மௌலிஷ்வரனையும் பேசி சம்மதிக்க வைத்தாள்.
டைப்ரைட்டிங்க் இன்ஸ்டியுட்டில் படிக்கும் திவ்யாவும் பாஸ்கரும் ஒருவரையொருவர் காதலித்தனர். இருவரும் அந்த ஜோசியரைப் போய் பார்த்தனர். ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாத அஷ்வினின் நண்பனான பாஸ்கர் ஜோசியர் குறிப்பிட்ட பெண்ணான தனது காதலி திவ்யாவை தொழிலதிபருக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவிக்கிறான்.
அதன்படி சந்திரமௌலிஷ்வரன்-திவ்ய திருமணம் நடை பெற்றது. ஜோசியர் கூறியது போல திவ்யாவின் மாங்கல்ய பலத்தால் சந்திரமௌலி உடல் நலம் தேறி ஆரோக்கியம் அடைந்தார். பாஸ்கர் திவ்யாவிடம் இன்னும் மூணு மாதத்தில் அவள் தன்னுடன் வர வேண்டும் என்றும் சொத்து கூட தேவை இல்லை என்றும் கூறினான். இவர்களது விவரம் தெரிந்த சந்திரமௌலி திவ்யாவை விவாகரத்து செய்து பாஸ்கரனுக்கு திருமணம் செய்து வைத்தார். ம தேனிலவுக்காக கொடைக்கானலுக்கு சென்ற புது மணத் தம்பதியரின் கார் விபத்திற்குள்ளாகி பாஸ்கர் சம்பவ இடத்திலேயே இறந்தான். கேள்வி பட்ட சந்திரமௌளியும் மாரடைப்பால் இறந்து போனார்.

No comments: