ஊருக்கு உபதேசம்

Written by Selvi on 10:34 AM

இலஞ்சி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அழகான சிறு கிராமம். அங்குள்ள நடு நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு ஆசிரியராக பணி புரிந்து வந்தார் ராமதாஸ் வாத்தியார். அழகான மனைவியும் இரு குழந்தைகளுமே அவரது உலகம். "வாத்தியார் பிள்ளை மக்கு" என்ற பழமொழிக்கேற்ப அவரது வாரிசுகள் கண்ணன் மற்றும் இளவரசி இருவருமே படிப்பில் படு சுமார்.

தென்காசியில் பிரபலமான ஜவுளிக்கடையில் பணிக்கு அமர்ந்தான் கண்ணன். அங்கு ஜவுளி எடுக்க வந்த மாலதியை காதலித்தான். மாலதி முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் நாளடைவில் கண்ணனின் அன்பில் உருகினாள். தென்காசி விஸ்வநாதரின் அருளால் இருவரின் காதலும் வளர்ந்தது. இவர்களது காதல் விவகாரம் வாத்தியாருக்கு தெரிந்ததும் கடுமையாக எதிர்த்தார்.

மாலதி தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவள் என்பதால் இக்காதலை நிராகரித்தார். மேலும் இவர்களது திருமணம் நடந்தால் இளவரசியை யாரும் பெண் கேட்டு வரமாட்டார்கள் என அஞ்சினார். மாலதி வாத்தியாரிடம், சார் "தீண்டாமை ஒரு பாவச் செயல்" என்றும் "சாதி இரண்டொழிய வேறில்லை" மாணவர்களுக்கு கற்பித்த நீங்களே சாதியை காரணம் காட்டி எங்களது காதலை நிராகரிக்கிறீர்களே என்று கூறக் கேட்ட வாத்தியார் அதிர்ந்தார்.

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 0 comments: Responses to “ ஊருக்கு உபதேசம் ”

Affliate sites/Links: Free Wallpapers, Tamil Novels Review, Chennai-Tourism, Addbus.com, dmegs.com, linksmarket.net, webtechvision, internetgecko, Million Product Store Hub Pages, free4u, google sites, searchsight, Google Directory, link-backnet, tagfetcher, searchsight, top-of-blogs, technorati, dmoz.org