Nov 15, 2008

சந்தன மலர்கள்

சாதரண குமாஸ்தாவாக இருந்த பெரிய சாமி நிறைய பணம் சம்பாதிக்க சீட்டு பிடிக்க ஆரம்பித்தார். பணம் அதிகமாக சேர்ந்ததும் தனது குடும்பத்திற்குக் கூட தெரியாமல் வீட்டையும் விற்று விட்டு கிடைத்த பணத்துடன் தலை மறவானார். அவரது மகள் ரஞ்சினி தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு குடும்பத்தைக் காப்பாற்ற வேலை தேடினாள். சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் பெரிய சாமியின் குடும்பத்தை தூற்றினர்.

சபரி எம்.சி.ஏ படிக்க ஆசைப் படுவதாக தனது தந்தையிடம் கூறிய போது தான் கட்டி வருகிற சீட்டு பணத்தை நம்பி சம்மதித்தார். பெரிய சாமி பணத்துடன் தலை மறைவானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். சபரி தனது படிப்புக்கேற்ற வேலையை தேடினான். 

ஒரு கம்பெனியின் நேர்முகத்தேர்வுக்கு இருவரும் வந்திருந்தனர். பெரிய சாமியின் செயலினால் ரஞ்சினிக்கு அந்த வேலை கிடைக்காமல் சபரிக்கு கிடைத்தது. சபரி ரஞ்சனியின் உண்மை நிலையறிந்து அவளுக்காக அனுதாபப் பட்டு அவ்வப்போது உதவிகள் செய்து வந்தான். அவனது குடும்பத்தினர் இதனை கண்டித்தனர்.  

சபரி தனது நண்பனின் மூலம் ரஞ்சினியை விளம்பர மாடலக்கினான். அதன் மூலம் அவள் சின்னத்திரையில் பிரபலமானாள். தான் புகழ் உச்சிக்கு சென்ற போதும் சபரியை தனது மானசீக வழிகாட்டியாக நினைத்து எல்லா விஷயத்திற்கும் அவனிடம் அறிவுரை கேட்டாள. அவனது தங்கை திருமணத்திற்கு பண உதவி செய்தாள். 

சபரியின் பெற்றோர் ரஞ்சினியின் அம்மாவிடம் தனது மகனுக்கு பெண் கேட்டனர். ரஞ்சினியின் அம்மாவோ அவர்களை அவமதித்து அனுப்பினாள். ரஞ்சினி தான் நடிக்கும் சீரியலின் கேமரா மேன் சசிதரன் தன்னை காதலிப்பதாக கூறியதாகவும் அதனை ஏற்கலாமா என சபரியை ஆலோசனை கேட்கிறாள். அவனும் ஏற்று கொள்ளச் சொல்லுகிறான். இதற்கிடையில் அவனது பெற்றோர் வந்து சென்றதை அம்மா கூறக் கேட்டு குழம்புகிறாள் ரஞ்சினி. இதனை சபரியிடமே கேட்கிறாள். அவன் அதைக் கேட்டு அதிர்கிறான்.

No comments: