உனக்கே உயிரானேன்
Written by Selvi on 8:18 PMசாவித்திரி தனக்கும் பாத்திருக்கும் மாப்பிளைக்குமுள்ள வயது வித்தியாசத்தின் காரணமாக தனது பெற்றோர்களை வெறுத்தாள். திருமணத்திற்கான அனைத்து செலவுகளையும் தானே ஏற்பதாக மாப்பிள்ளை சந்துரு கூறியது அவள் அப்பாவுக்கு மிகவும் வசதியாகி விட்டது. திருமணம் முடிந்து முதலிரவில் சந்துருவிடமே இதற்காக சண்டை போட்டாள். சந்துரு தனது வயதான தாயினை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டியே இதனை காலமும் திருமணம் செய்யாமலே இருந்து விட்டதாக கூறினான். அவன் சாவித்திரி குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை அவள் அனுமதி இல்லாமலே செய்து வந்தான். அவளுக்கு அதில் விருப்பம் இல்லை. மேலும் அவளது முதல் தங்கை லலிதாவுக்கு தனது செலவிலே நகை செய்து ஒரு எஞ்சினியர் மாப்பிளைக்கு திருமணம் செய்து வைத்தான். திருமணத்திற்கு தனது மனைவிக்கு சாதரண புடவை எடுத்திருந்தது பற்றி மாமனாரிடம் தன் அதிருப்தியைக் கூறுகிறான். மேலும் தன்னிடம் சொல்லியிருந்தால் நகையுடன் புடவையையும் சேர்த்து எடுத்து இருப்பெனேன்றும் கூறுகிறான். நகை செய்து போட்டதை குத்தி காட்டுவதாக சாவித்திரியின் தந்தை நினைத்தார். அடுத்த தங்கை மாலதி தன்னுடன் கல்லூரியில் படித்த அஷ்வினை தான் காதலிப்பதாகவும் எப்படியாவது திருமணம் செய்து வைக்கும்படியும் சந்துருவிடம் கூறுகிறாள். திருமணத்திற்காக மறைமுகமாக உதவி செய்கிறான். தலை தீபாவளிக்காக மூன்று மாப்பிளையையும் வீட்டிற்கு அழைத்தனர். ஆயினும் சந்துருவை அவமதிப்பதைப் போல நடத்துவதை கண்டு வெகுண்டாள் சாவித்திரி. தனது பெற்றோருடன் இதற்காக சண்டை இட்டாள். சந்துருவிடம் அலுவலகத்தில் வேறு ஏதேனும் ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்குமாறும் கேட்டுக் கொண்டாள்.
| Posted in »

0 comments: Responses to “ உனக்கே உயிரானேன் ”