எல்லைக் கோடுகள்
Written by Selvi on 10:19 AMமார்கெட்டுக்கு சென்ற வனிதா அங்கு மாயாவின் தைரியத்தைக் கண்டு இவள் தனது கொழுந்தனுக்கு(கணவனின் தம்பி) மனைவியாக வந்தால் நன்றாக இருக்குமே என எண்ணினாள். வனிதா தனது புகுந்த வீட்டில் மாமியார் மட்டுமல்லாது நாத்தனாரின் கொடுமைக்கும் ஆளாகினாள். அவள் கணவன் கதிரேசனோ அதைப் பற்றி கண்டு கொள்ள மாட்டான். கொழுந்தன் கௌதம் தான் விரும்பும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக திட்டவட்டமாக கூறினான். அவனது பேச்சுக்கு வீட்டில் மறுப்பு கிடையாது. தான் நினைத்த மாயாவே அவனுக்கு மனைவியாக அமைந்ததில் வனிதாவுக்கு மிக்க மகிழ்ச்சி. மாயா மூலம் தனக்கு விடிவு கிடைக்கும் என நம்பினாள். ஆனால் கௌதமுக்கு அலுவலக மாற்றல் காரணமாக மகாராஷ்டிராவுக்கு தனிக் குடித்தனம் சென்றனர். சில மாதங்களில் மாயா கருவுற்றாள். மசக்கையின் காரணமாக ஊருக்கு வந்தாள். கௌதம் தனது சகோதரியின் குணம் அறிந்திரிந்ததால் மாயாவை அவளது தாயார் வீட்டில் தான் அவள் இருக்கவேண்டுமென்று திட்டவட்டமாக கூறினான். கௌதம் அவளது குடும்பத்துக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்திருந்தான். மாயாவின் அண்ணனின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு காரணம் மாயாவின் வயற்றில் வளரும் குழந்தை தான் என அவள் அண்ணி ராதிகா கூறினாள். மாயா கௌதமிடம் இதனை கூறி அழுதாள். தான் புகுந்த வீட்டில் இருப்பது தான் தனக்கு மரியாதை எனக் கூறினாள். கௌதமின் சகோதரியும் தனது தவறுகளை எண்ணி வருந்தி தனிக் குடுத்தனம் செல்ல முடிவெடுத்தாள்.
| Posted in »

0 comments: Responses to “ எல்லைக் கோடுகள் ”