Nov 21, 2008

கண்ணோரம் மின்சாரம்

வெளி நாட்டிலிருந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு வரும் தன் மகன் சத்தியனை வரவேற்கிறார்கள் சிங்கார மூர்த்தியும் அவரது மனைவி தங்கமும். வரும் போதே ஊருக்கு வரும் குறுக்குப் பாதையில் உள்ள குளத்தில் ஒருத்தி குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அவள் ஆவியாக அலைவதாகவும் கூறக் கேட்ட சத்தியன் திகைத்தான்.
தங்கம் தன் மகனுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்திருப்பதாக கூறுகிறாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களைப் பார்த்து விட்டு அந்த குலத்தின் வழியாக திரும்பிக் கொண்டிருந்த பொது அக்குளத்தில் ஒரு பெண் குளிப்பதைக் கண்டான். அப்பெண் இறந்து போனவளின் மகள் மங்கை என்பதை அறிகிறான். தன் நண்பர்களின் மூலம் இறந்து போன பெண்ணின் கணவன் தன் மகளை ஒத்த ஒரு பெண்ணை கெடுத்து விட்டதாகவும் அதனால் அப்பெண்(மீனா) மன நிலை பாதிக்கப்பட்டு விட்டதாகவும் அப்பெண்ணையே அவள் கணவனுக்கு சத்தியனின் அப்பா திருமணம் செய்து வைத்ததாகவும் அதை சகிக்காமல் அப்பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறக் கேட்கிறான்.
மறு நாள் மீண்டும் அப்பெண்ணை சந்திக்க சென்ற போது பக்கத்து ஊர் பாண்டியனிடமிருந்து அவளை காப்பாற்றினான். அவள் மீனாவை கெடுத்து இந்த பாண்டியன் என்றும் தன் தாய் அவசரப் பட்டு தற்கொலை செய்து கொண்டாள்என்றும் கூறுகிறாள். மீனாவை டவுனுக்கு அழைத்து சென்று அவளை குணப்படுத்த வேண்டும். உண்மையான குற்றவாளியை அவள் மூலம் கூற வைத்து தன் தந்தை மீது சுமத்தப் பட்ட களங்கத்தை போக்க வேண்டும் என்று கூறுகிறாள்.
சத்தியன் தன் அவளை காதலிப்பதாகவும் அவளுடைய லட்சியத்திற்கு உறுதுணையாக இருப்பதாகவும் கூறுகிறான். அதன் படி மீனாவை டவுன் ஆஸ்பத்திரியில் சேர்த்து குணப்படுத்து கிறார்கள். மீனா தன்னை கெடுத்தது சத்தியனின் தந்தை சிங்கார மூர்த்தி எனக் கூறியதை கேட்டு அதிர்கிறாள் மங்கை. சத்தியன் மங்கையிடம் தான் வந்த பஸ்சில் மோதி பாண்டியன் இறந்து விட்டதாக கூறுகிறான். மீனா தன் தோழியின் காதலுக்காக தன்னைக் கெடுத்தது சத்தியனின் அப்பா என்பதை அவனிடம் கூறாமல் மறைத்து விடுகிறாள்.

No comments: