தனசேகரன் தாயை இழந்த தன் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார். பெரியவன் ராஜா நன்கு படித்து கம்ப்யூட்டர் எஞ்சினியராக பணிபுரிந்து வந்தான். இளையவள் சவுந்தர்யா கல்லூரியில் படித்துக் கொண்டே வீட்டு பொறுப்புகளையும் கவனித்து வந்தாள். அவளது அண்ணி சுப்ரஜா பணக்கார வீட்டு பெண்ணாகவும், பேங்கில் கேஷியாரகவும் இருந்ததால் வீட்டில் சிறு துரும்பை கூட கிள்ளிப் போட மாட்டாள்.
தனசேகர் குடியிருந்த வீட்டை மகன் பேரிலும் தனது பென்சன் பணம் இரண்டு லட்சத்தை மகளின் திருமணத்திற்காகவும் அவளது பெயரில் பேங்கில் போட்டு வைத்தார். ராஜா தனது சுயநலத்திற்காக தனது தங்கையை மன நலம் சரியில்லாத ஒருவனுக்கு கட்டிக் கொடுக்க எண்ணியிருப்பதை கேட்ட தன சேகரனுக்கு அதிர்ச்சியாக யிருந்தது. சவுந்தர்யா பெயரில் போட்டு வைத்த பணத்திற்கு ஒரு லாரி வாங்கி வாடகைக்கு விடுகிறார்.
சவுந்தர்யா கோவிலில் எதிர் பாராமல் சந்தித்த அருணையே தனக்கு மாப்பிளையாக அப்பா தேர்வு செய்ததை எண்ணி மகிழ்ந்தாள். ஆனால் அருணோ சவுந்தர்யாவின் போட்டோவை பார்க்காமல் தனது தங்கையின் திருமணத்திற்குப் பிறகே தன் திருமணம் என்று கூறுகிறான்.
மகன் வீட்டை விற்று விட்ட அதிர்ச்சியில் தனசேகரன் இறந்து விடுகிறார். மகளின் திருமணத்திற்காக நண்பனிடம் பணம் வாங்கி கொண்டு வரும் அருணின் அப்பா வழியில் சவுந்தர்யாவுக்கு சொந்தமான லாரியில் அடிபட்டு இறந்து விடுகிறார். பணத்தை லாரி டிரைவர் அபகரித்துக் கொண்டு ஓடி விடுகிறான். சவுந்தர்யா லாரியை விற்று அந்த பணத்தை அருணிடம் கொடுத்து விடுகிறாள். அண்ணனும் கை விட்ட நிலையில் சவுந்தர்யா சென்னைக்கு சென்று ஒரு வேலையில் சேர்கிறாள்.
இறுதியில் அருண் தன் அப்பா தனக்கு பார்த்த பெண் சவுந்தர்யா என்பதை அறிந்து அவளை தேடி கண்டுபிடித்து கரம் பிடிக்கிறான்.
No comments:
Post a Comment