மனசுக்குள் நெருப்பு

Written by Selvi on 7:09 PM

இன்ஸ்பெக்டர் பிரபு தனது ஒரே தங்கை ஷகிலாவை எம்.ஏ. முடித்தும் ஐ.பி.எஸ். படிக்க வைக்க நினைத்தான். ஆனால் ஷகிலாவோ தான் காதலிக்கும் பாலனை திருமணம் செய்ய நினைத்தாள். பிரபு தன்னிடம் காதலை கூற வந்த மைதிலியை அவமானப் படுத்தி அனுப்பியதைக் கண்ட ஷகிலா அதிர்கிறாள்.
நகரில் புதிதாக திருமணமாகும் மணமகன்கள் அனைவரும் அடுத்தடுத்து கொல்லப் படுகின்றனர். கொலை காரனைப் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. ஒரு முக்கியமான வி.ஐ.பி யின் மகனின் திருமண வரவேற்புக்கு பிரபுவை மணமகனின் பாதுகாப்பிற்கு அனுப்புகிறார் டி.ஜி.பி. தினகரன். அப்படியும் மணமகன் கொல்லப்படுகிறான்.
இதனால் பிரபு சஸ்பென்ட் செய்யப்படிகிறான். ஷகிலா-பலன் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டு பிரபுவிடம் வருகின்றனர். கோபம் கொண்ட பிரபு இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறான். இவர்கள் மூலம் கொலையாளியை பிடிக்க எண்ணுகிறார் டி.ஜி.பி. அதன்படி இவர்களது திருமண வரவேற்பு அழைப்பிதழ் நாளிதழ்களில் வெளியிடப்படுகிறது. நள்ளிரவில் பாலனை கொலை செய்ய வரும் கொலையாளியை போலீசார் மடக்கி பிடிக்கின்றனர். கொலையாளி பிரபு என தெரிந்ததும் அனைவரும் அதிர்கின்றனர்.

பிரபுவை சைக்யாட்ரிஸ்ட் ரவிச்சந்திரன் ஆழ்நிலை உறக்கத்திற்கு கொண்டு சென்று உண்மையை கண்டறிகிறார். அதன்படி பிரபுவினால் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட முடியாத குறை உள்ளது எனவும் அதனால் தான் பெறாத மகிழ்ச்சியை யாரும் அடையக் கூடாது என மன நலம் பாதிக்கப்பட்டு ஒவ்வொருவரையாக கொலை செய்துள்ளான் என தெரிய வருகிறது.

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 0 comments: Responses to “ மனசுக்குள் நெருப்பு ”

Affliate sites/Links: Free Wallpapers, Tamil Novels Review, Chennai-Tourism, Addbus.com, dmegs.com, linksmarket.net, webtechvision, internetgecko, Million Product Store Hub Pages, free4u, google sites, searchsight, Google Directory, link-backnet, tagfetcher, searchsight, top-of-blogs, technorati, dmoz.org