தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்ற பவித்ரா காணாமல்போன வழக்கை விசாரிக்கிறார் க்ரைம் பிரான்ச்ஆபிசர் அபிலாஷ். பழவந்தாங்கல் ஏரியில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் மற்றும் ஒரு பெண்ணின் தலை கிடைக்கிறது. பெண் தலை பவித்ராவின் தலை எனபது போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் மூலம் கண்டறியப்படுகிறது.
ஹோட்டல் செவென் - ஸி- இன்டர் நேஷனலில் தங்கியிருக்கும் பிலிப்ஸ் ஹோட்டல் ரிஷப்னிஸ்ட் ஹரிணியின் வீட்டுக்கு சென்று தனக்கு இணங்குமாறு கேட்கிறான். தற்செயலாக ஹரிணி வீடு பிரிட்ஜில் வைக்கபட்டிருந்த துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள மனித கையை பார்த்து அலறுகிறான். ஹரிணி தனக்கு நர மாமிசம் மிகவும் பிடிக்கும் எனக் கூறி பின் அவனையும் மயக்க ஊசி மூலம் கொன்று மாமிசத்தை பதப்படுத்துகிறாள்.
பவித்ரா காணாமல் போன வழக்கில் ஹரிணியை விசாரிக்க வரும் அபிலாஷின் சட்டையில் அவள் காலில் கண்ணாடி துண்டு குத்தியதால் சிந்திய ரத்த துளிகள் படுகிறது. அபிலஷின் தாய் அச்சட்டையை துவைக்கும் போது அது நீல நிறமாக மாறி இருப்பதையும் அதன் அருகில் சில ஈக்கள் இறந்து கிடப்பதையும் கூறுகிறாள்.
இறுதியில் ஹரிணி தான் அனைத்து கொலைகளுக்கும் காரணம் என்பதையும் அவள் நர மாமிசம் சாப்பிடக் கூடியவள் என்பதும் கண்டறியப்படுகிறது.
No comments:
Post a Comment