Feb 27, 2012

முயன்றால் மடிவாய்

சரண்யா, அவளது தோழிகளான அர்ச்சனா, ராதா மற்றும் ஷோபனா ஆகியோர் சரண்யாவின் காதலன் மோகனின் உதவியுடன் செமஸ்டர் விடுமுறையை கழிக்க மங்கி பால்சுக்குச் செல்ல திட்டமிடுகின்றனர். செல்லும் வழியில் ஆழியாறு அணைக்கட்டில் ராதாவை கொள்ள யாரோ முயலுகின்றனர். மங்கி பால்சில் ஷோபனா கொல்லப்படுகிறாள்.

மற்றொரு கதையாக நான்கு மாணவிகள் கல்லூரி விடுதியிலிருந்து யாருக்கும் தெரியாமல் இரவுக்காட்சி சினிமாவுக்கு சென்று விட்டு ஆஸ்டல் வார்டன் சாந்த மேரியிடம் மாட்டுகின்றனர். பிரின்சிபால் கண்டித்ததுடன் விடுதியை விட்டு நீக்கி விடுகின்றார். வார்டனை பழிவாங்க எண்ணிய மாணவிகள் அவர் ரூமில் ஆபாச புத்தகம் மற்றும் சி.டி யை வைத்து அனைவரும் நம்பும்படி பழி சுமத்துகின்றனர். அவமானம் தங்க முடியாத வார்டன் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

வார்டன் தற்கொலையால் பாதிக்கப்பட்ட யாரோ தான் நம் அனைவரையும் கொல்ல முயற்சிப்பதாக எண்ணுகிறார்கள் சரண்யா மற்றும் அவளது தோழிகள். ராதாவின் கொலைக்கு அவளது முன்னாள் காதலன் தான் காரணம் என்பதையும், வார்டனின் மரணத்தில் மாணவிகளின் தவறையும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தின் மூலம் அவர்களுக்கு உணர்த்துகிறார்கள் இன்ஸ்பெக்டர் மற்றும் கல்லூரி பாதுகாப்பு அதிகாரி மேனன்.

No comments: