Feb 27, 2012

உயிர்

இந்த கதையை ஆசிரியர் சிற்ப சாஸ்திரத்தை மையமாகக் கொண்டு எழுதியுள்ளார்.

மிருதங்க வித்வான் நாகநாத பிள்ளைக்கு திடீரென்று பக்க வாதம் ஏற்படுகின்றது. அவரின் மனைவி லக்ஷ்மியும் நண்பர் சிவபிரகாசமும் சேர்ந்து அவரை மருத்துவமனையில் செர்க்கின்றனர். அவரின் இந்த நிலைமைக்கு காரணம் விடை தாங்கி கிராமத்தில் நந்தியின் அம்சமான ஒரு களை மாட்டின் மீது காரை மோதியதால் தான் என்று டிரைவர் கூறுகிறார்.

பிரபல சினிமா நடிகை நந்தனா மும்பை தாத்தாவின் மிரட்டலுக்குப் பயந்து தன்னிடம் வேலை பார்க்கும் மாமியின் உதவியைக் கோருகிறாள். மாமியும் விடைதங்கி நன்தீஸ்வரின் காதில் கோரிக்கை வைத்தால் உடனே நிறைவேறி விடுமென்று கூறி, கோரிக்கையும் வைக்கிறார்கள். அதன்படியே மும்பை தாதாவின் தொல்லையிலிருந்து தப்பிக்கிறாள்.

நாகநாத பிள்ளையை லக்ஷ்மியும் சிவபிரகாசமும் விடைதாங்கிக்கு அழைத்து வருகிறார்கள். அவ்வூர் பெரியவர் ஆண்டுக்கு ஒருமுறை கோவில் நந்தி உயிர் பெற்று நடமாடுவதாகவும் 108 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்று தினங்கள் நடமாடுவதாகவும் கூறுகிறார். இதனை பரிசோதிக்க நினைத்த சிவபிரகாசம் யாருக்கும் தெரியாமல் கோவிலுக்கு சென்று பார்க்கிறார்.

நந்தாவுக்கு பாது காப்பு அளிக்க வந்த A.C. ரவி பிரகாஷ் நந்தாவின் மீது எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்து அவளை கைபிடிக்க எண்ணுகிறார். விடைதாங்கி கைலாச நாதனின் அருளால் நாகநாத பிள்ளையின் பக்க வாதம் குணமாகிறது. இறைவனின் அற்புதத்தை வீடியோ எடுத்து உலகுக்கு காட்டி அதன்மூலம் பணம் சம்பாதிக்க நினைத்த சிவபிரகாசம் பேசும் திறனை இழக்கிறார்.

No comments: