ஆறு மாத கர்ப்பிணியான சூர்யாவுக்கு அவளது முன்னாள் காதலன் ரதீஷிடமிருந்து மிரட்டல் போன் வருகிறது. அதில் தான் ஜெயிலுக்கு போக நீதான் காரணம் எனவும் அதற்காக இருபதாயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கூறுகிறான். முதல் தவணையாக அன்று இரவு வந்து பத்தாயிரம் ரூபாய் வாங்கிக் கொள்வதாக கூறுகிறான்.
சூர்யாவின் இன்ஸ்பெக்டர் கணவன் ராஜன் இரவு உணவுக்கு வரும் முன்பு பணம் வாங்க வந்த ரதீஷ் சூர்யாவிடம் தவறாக நடக்க முயன்ற ரதீஷை கட்டையால் தலையில் அடித்து கொலை செய்துவிடுகின்றாள் சூர்யா. ராஜனுக்குத் தெரியாமல் சூர்யாவின் அண்ணன் ரதிஷின் உடலை அப்புறப்படுத்தி ரயில்வே தண்டவாளத்தில் கொண்டு போட்டு விடுகிறார்.
இந்த கேசை விசாரிக்கும் ராஜன் ரதிஷின் சட்டையிலிருந்து கிழிந்த பகுதி தன் வீட்டில் இருப்பதை கண்டு இருவரையும் விசாரிக்கிறான். சூர்யாவை காப்பாற்றும் பொருட்டு, அவளது அண்ணன் திருட வந்த திருடன் தன் தங்கையிடம் தவறாக நடக்க முயன்றதைக் கண்டு தான் தான் அவனைக் கொன்றதாகக் கூறுகிறான்.
No comments:
Post a Comment