Feb 29, 2012

பதில் தா பரத்

தொழிலதிபர் விபுநாத் சி.பி.ஐ ரெய்டுக்குப் பயந்து சட்ட விரோதமாக சம்பாதித்த அரை கோடி ரூபாயை எங்கோ ஒரு இடத்தில மறைத்து வைத்து வீட்டு மறு நாள் மாரடைப்பில் இறந்து விடுகிறார். பணத்தை கைப்பற்ற அவரது மனைவி ஜெயராணி பரத் சுசீலா உதவியை நாடினார்.

விபுநாத்தின் மகன் சுதிர் தன் தந்தையின் சாவில் சேர்மனை சந்தேகிக்கிறான். மகள் ஆர்த்தி போதை பழக்கம் மற்றும் ஆண் சகவாசம் கொண்டிருக்கிறாள். பணத்தை வைத்திருக்கும் இடத்திற்கான குறிப்பிற்கான டைரி கிடைக்கிறது. பரத், சுசீலாவிற்கு மிரட்டல் வருகிறது. ஜெயராணி மற்றும் சேர்மன் ஆகியோருக்கிடையில் தவறான தொடர்பு இருப்பது பரத்திற்கு தெரிய வருகிறது. ஆர்த்தி கார் விபத்தில் இறக்கிறாள்.

பணத்தை ப்ளம்ஸ் தோட்டத்தில் மறைத்து வைத்திருப்பதை பரத் டைரி குறிப்பு மூலம் கண்டுபிடிக்கிறார். தந்தை, சித்தி மற்றும் தங்கையை அவர்களது ஒழுங்கீன நடவடிக்கையால் ஆத்திரமுற்று தான் தான் கொன்றதை சுதிர் ஒப்புக்கொள்கிறான்.

No comments: