Mar 1, 2012

மீண்டும் மலர் வளையம்

மூன் லைட் தியேட்டரில் பாக்ஸ் வகுப்பில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள். தியேட்டர் அதிபர் ராஜ சேகரன் தன் பால்ய நண்பர் இகிள்ஸ் ஐ தாசின் உதவியை கோருகிறார். நரேந்திரன் வைஜெயந்தி கொலையை துப்பு துலக்குகின்றனர்.

கொலை செய்யப்பட பெண் ரோகிணி தவறானவள் என்பதையும் அவளுக்கும் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் மோகன் என்ற சதசிவதிற்கும் தொடர்பு இருப்பதை அறிந்து மோகனை மடக்குகின்றனர். மோகன் ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்து இறக்கிறான்.

அவனது சாவில் சந்தேகம் கொண்ட நரேன்-வைஜ் ஜோடி ரோகிணி ரூமிலிருந்து எடுக்கப்பட்ட லாட்ஜ் ரூம் ரசீதை கொண்டு துப்பு துலக்குகின்றனர். இறுதியில் ரோகிணி மற்றும் மோகன் கொலைக்கு ராஜசேகரனும் அவரது மகன் பார்த்திபனுமே காரணம் என்பதை கண்டறிகின்றனர்.

No comments: