Mar 2, 2012

புதிர் பூத்த நந்தவனம்

அர்ச்சனா துரைராஜ் மாதர் சங்கத் தலைவி. அவளது கணவன் துரைராஜ் அசிஸ்டன்ட் கமிஷனர். அர்ச்சனாவுக்கு பல ஆண்களுடன் தவறான உறவு இருக்கிறது. அதே போல் அவளது கணவருக்கும் பிற பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. இருவரும் அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை.

அர்ச்சனா தன்னை சந்திக்க வந்த பாரதி நற்பணி மன்ற தலைவன் லக்ஷ்மணனின் தோற்ற வசீகரத்தில் மயங்கி அவனை தன்னுடைய கெஸ்ட் அவுசுக்கு வரவழைத்து தவறாக நடக்க முயற்சிக்கிறாள். அதிர்ச்சியடைந்த லக்ஷ்மணன் அவளது அந்தரங்கத்தை வெளியுலக்குக்கு கூறப் போவதாக எச்சரிக்கிறான்.

அர்ச்சனா தனது கணவனின் அதிகாரத்தைப் பயன்படுத்தி லக்ஷ்மணனின் மீது கொலைப் பலி சுமத்தி ஜெயிலில் அடைக்கிறாள். அவமானம் தாங்காமல் லக்ஷ்மணனின் பெற்றோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். லக்ஷ்மணன் ஜெயிலிலிருந்து தப்பி அர்ச்சனாவை மிரட்டுகிறான்.

இறுதியில் தனது நண்பன் விக்னேஷின் மூலம் அர்ச்சனாவைப் பற்றிய உண்மையை ஒரு பாராட்டு விழாவில் அனைவருக்கும் தெரியப் படுத்துகிறான்.

No comments: