தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு கைக்குழந்தையுடன் மாற்றலாகி வருகிறாள் புவனா. அவளுக்கு பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் பாலு மற்றும் அவனது பெற்றோர் மிகவும் உதவியாக இருக்கிறார்கள். தன்னை ஏமாற்றிய பிரசன்னாவை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டுமென்று நினைக்கிறாள்.
பிரசன்னா பணத்துக்காக சசிகலாவை திருமணம் செய்து பின் அவளுக்கு தெரியாமல் துரோகம் செய்து கொண்டிருக்கிறான். பாலுவிடம் தனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி அனைத்தையும் கூறுகிறாள் புவனா. இருவருக்கும் ஒருவர் மீது மற்றொருவருக்கு காதல் இருக்கிறது. ஆனால் வெளிப்படுத்தவில்லை.
பிரசன்னாவுக்கு பிரபலக் கட்சி ஒன்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் தருகிறது. அவனது நடத்தையில் சசிகலாவுக்கு சந்தேகம் வருகிறது. பிரசன்னாவை அடையாளம் கண்ட புவனா அவனை மிரட்டுகிறாள். புவனாவை பிரசன்னா கொலை செய்து விடுகிறான். சசிகலா பிரசன்னாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சிக்கிறாள்.
பாலு புவனாவின் குழந்தையை தன் குழந்தையாக வளர்க்கிறான்.
No comments:
Post a Comment