டாக்டர் ஜெயகுமாரின் ஆஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சாந்தி ரூமில் டாக்டர் பெஞ்சமின் கொலை செய்யப்படுகிறார். ஒரு பென்சிலின் முனையை ஆயுதமாகக் கொண்டு கொலை நடந்திருக்கிறது.
மகாதேவன் குழந்தை கடத்தல் கேசில் மாந்திரிகம் தெரிந்த விஜய் பாணியை சிறைக்கு அனுப்புகிறார். அதற்குப் பழி வாங்கும் விதத்தில் மகாதேவனை செய்வினை மூலம் கொல்கிறான்.
சாந்தியின் உடம்பிலுள்ள பானர்ஜியின் ஆவி விஜய்பாணியின் உத்தரவுப்படி, பால் அலெக்ஸாண்டர், ஜெயகுமாரின் மகன் சுரேஷ், அவரது மனைவி தேவசேனா, கமிஷனர் மற்றும் சாந்தியின் அம்மா கல்பனா மகாதேவன் ஆகியோரை கொலை செய்கிறது.
இறுதியில் ஸ்ரீதரன் நம்பூதரியின் மூலம் இன்ஸ்பெக்டர் விஜய் பாணிக்கு முடிவு கட்டுகிறார். இத்தனை கொலைக்கும் தானும் ஒரு விதத்தில் காரணம் எனக் கருதி, சாந்தி தற்கொலை செய்து கொள்கிறாள்.
No comments:
Post a Comment