பணக்காரர் சூரியமூர்த்தியின் ஒரே பெண் புவனா, தன் தந்தையிடம் மாதம் இரண்டாயிரத்திற்கு வேலை பார்க்கும் பாஸ்கரனை காதலிக்கிறாள். பாஸ்கர், தன்னுடைய பொருளாதார மட்டத்திற்கு இரங்கி வந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வது என்பதில் பிடிவாதமாக இருக்கிறான்.
புவனாவும் அதற்கு சம்மதிக்கிறாள். சூரியமூர்த்தியும் வேறு வழியில்லாமல் திருமணத்தை நடத்தி வைக்கிறார். புகுந்த வீட்டில், தாழ்வு மனப்பான்மையின் காரணமாக பாஸ்கரனால் பல்வேறு கொடுமைக்கு ஆளாகிறாள்.
மகளுக்கு ஏற்படும் கொடுமையை தட்டிக் கேட்ட மாமனாருடன் பகைத்துக் கொண்டு வேலையையும் விட்டுவிட்டான். வேறு இடத்தில தரும் சம்பளமும் கம்மியாக இருந்ததால் கர்ப்பிணியான புவனா, இலவச மருத்துவ மனையில் ரெகுலர் செக்கப் செய்து கொண்டாள். பிரசவம் சிக்கலாகி ஒரு குழந்தையை பெற்று விட்டு இறக்கிறாள்.
No comments:
Post a Comment