நர்மதா தன் கணவன் தேவராஜை விவாகரத்து செய்து விட்டு மகன் கார்த்திக்குடன் தனியாக வசிக்கிறாள். பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் கங்கா மற்றும் அவளது தங்கை வைஷ்ணவியிடம் தன் கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தன்னை கொடுமைப்படுத்தியதையும், தன் இரண்டாவது கர்ப்பம் கலைய காரணமாக இருந்ததையும் அதனால் விவாகரத்து வாங்கியதையும் கூறினாள்.
கங்காவும் ஐந்து பவுன் நகைக்காக தான் புகுந்த வீட்டுக்குச் செல்லாமல் இருப்பதை கூறுகிறாள். இவர்களைப் பார்த்து வைஷ்ணவி திருமணத்தையே வெறுக்கிறாள். விவாகரத்தால் மேலும் விரக்தி அடைந்து தேவராஜ் முழு நேர குடிகாரனாகிறான்.
தேவாவின் நண்பன் சிவா தேவாவை மறுவாழ்வு மையத்தின் மூலமாகவும், தனிப்பட்ட முயற்சி எடுத்தும் திருத்தி நல்வழிப்படுத்துகிறான். நர்மதாவுக்கும் அறிவுரை கூறி தேவாவுடன் சேர்ந்து வாழ கூறுகிறான்.
No comments:
Post a Comment