Mar 7, 2012

கற்பனையோ கைவந்ததோ

புவனா நாகர்கோவில் கான்வென்ட் ஒன்றினால் வளர்க்கப்பட்ட அநாதை. கான்வென்ட் சிஸ்டர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தொழிலதிபர் தியாக ராஜனின் மகன் விநோதனை இரண்டு மதம் கவனித்துக் கொள்ள சம்மதிக்கிறாள்.

தியாகுவின் டிரைவர் கோபி புவனாவிடம் வழிகிறான். பிறக்கும்போதே தாயை இழந்த சிறுவன் வினு புவனாவிடம் நன்கு ஒட்டிக் கொள்கிறான். காண்வென்டில் தன்னுடன் படித்த சரிகாவை தியாகுவின் வீட்டில் சந்திக்கிறாள் புவனா. சரிகா தியாகுவின் மீதுள்ள ஆசையால் புவனாவின் மீது பொறாமை கொண்டு அவளை மூக்குப் பாறையிலிருந்து தள்ளி விடுகிறாள்.

இது தெரிந்த தியாகு சரிகாவை துரத்தி விடுகிறார். புவனா காப்பற்றப் படுகிறாள். கோபி புவனாவிடம் சரிகா கூறியதன் பேரில் தவறாக நடக்க முயலுகிறான். அவனிடமிருந்து தப்பி விடுகிறாள் புவனா. தியாகுவின் உண்மையான அன்பினை உணர்ந்து அவனை மணக்க சம்மதிக்கிறாள் புவனா.

No comments: