Mar 9, 2012

தப்புக்கணக்கு

ஆத்மா கொல்கத்தாவில் திருமணமான நான்கு மாதங்களிலேயே மனைவியை இழந்தவன். பின் சென்னைக்கு வந்து ஒரு டிராக்டர் தயாரிக்கும் கம்பெனியில் பார்ட்னர் மற்றும் ஜி.எம் ஆக இருப்பவன். சட்டக்கல்லூரியில் தன்னுடன் படித்த பாஸ்கரன் மற்றும் அவன் மூலம் அறிமுகமான சுந்தர் உமா மற்றும் மாது சுசிலா தம்பதியினருடன் தினமும் மாலை பொழுதைக் கழிக்கிறான்.

ஒருநாள் அவ்வாறு செல்லும்போது பாஸ்கரனை கார் சேசிங் செய்து வெறுப்பேற்றுகிறான். அதில் பாஸ்கர் போதையில், ஆத்மா மனைவியை இழந்தவன் என்பதை சுட்டிக் காட்டி பேசியதை பொறுக்காமல் அவனை பழி வாங்க எண்ணுகிறான்.

அதன்படி திட்டமிட்டு பாஸ்கரின் மனைவி சித்ராவிடம் பழகுகிறான். அவளை பாச்கருக்குத் தெரியாமல் தன்வசப்படுத்துகிறான். அவனிடம் தன்னை இழக்கின்ற சித்ரா குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறாள். தன் தவறை உணர்ந்த ஆத்மாவும் தற்கொலை செய்து கொள்கிறான்.

No comments: