Mar 12, 2012

ஏதோ அறியேன் எனதாருயிரே

கார்த்திக் தனது பேங்க் அலுவலக நண்பர்களுடன் ஹைதராபாத்திற்கு ஒரு வார சுற்றுலா செல்கிறான். அங்கு ப்ரீத்தி என்ற பெண்ணை விபசார விடுதியிலிருந்து தனது நகைகளைக் கொடுத்து மீட்கிறான். அவள் தனக்கு எய்ட்ஸ் இருப்பதாகக் கூறியும் பொருட்படுத்தாமல் அவளுக்கு தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்கிறான்.

ப்ரீத்தி அவனிடமிருந்து காணாமல் போய் விடுகிறாள். அவளை எங்கு தேடியும் கிடைக்காமல் போலீசில் கம்ப்ளைன்ட் செய்து பின் ஊர் திரும்புகிறான். அவனது அம்மாவும் தங்கையும் நகைகளைப் பற்றி கேட்கும்போது ஏதோ சொல்லி சமாளிக்கிறான்.

ராஜி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் திரைக்குப் பின்னால் பணிபுரிகிறாள். அவளது தாய் பரிபூரணம் ராஜியின் திருமணத்திற்குப் பிறகே இரண்டாவது மகன் லட்சுமி நாராயணனுக்கு திருமணம் என்கிறாள். அவள் தந்தை சுவாமி நாதனுக்கு இதில் உடன்பாடு இல்லை. ராஜி தனது அண்ணன் மாதவன் மற்றும் அண்ணி மாலதியுடன் அண்ணியின் தம்பி திருமணத்திற்கு சென்று பின் மேலும் ஒரு பத்து நாள் தங்கி பின் வீடு திரும்பி இருக்கிறாள்.

ராஜியை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை கார்த்திக்கின் நண்பன் வெங்கட். அவன் ராஜியின் குடும்பத்தினரிடம் ராஜி தன் பெயரை ப்ரீத்தி என்று கூறியதைப் பற்றியும்,ஹைதராபாத் விவரத்தைப் பற்றியும், கார்த்திக்கை பற்றியும் கூறுகிறான். ராஜி தான் அங்கிருந்து தப்பிக்கவே போய் கூறியதாக கூறுகிறாள்.

இறுதியில் ராஜிக்கும் கார்த்திக்கிற்கும் திருமணம் நிச்சயமாகிறது.

No comments: