Mar 14, 2012

வேர் இல்லாத மரங்கள்

மாதவனும் வசந்தாவும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். இருவரும் வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரின் சம்மதமும் கிடைக்க வில்லை. இருவரும் அவரவரின் மதங்களை விட்டுக் கொடுக்க முடியாமல் பதிவு திருமணம் செய்து கொள்கின்றனர்.

சில மாதங்களில் மாதவனின் தாய்க்கு மாரடைப்பு என அவனுக்கு போன் வருகிறது. கர்ப்பிணியான வசந்தாவை தனியாக விட்டு விட்டு கிராமத்தில் தங்க முடியாமல் அவதிப்படுகிறான். வசந்தா, தன் அத்தம்மாவை தங்களுடன் வந்து இருக்க கோருகிறாள். அத்தம்மாவும் அதற்கு சம்மதிக்கிறாள். அவரது ஜெபம், சமையல் மாதவனுக்கு பிடிக்கவில்லை.

வசந்தாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. மாதவனின் தாய் குழந்தையை தொட்டிலில் போட்டு பேர் வைக்க நினைக்கிறார். வசந்தா ஞான ஸ்நானம் செய்ய வேண்டும் என்கிறாள். இந்த சண்டையால் குழந்தைக்கு பேரே வைக்காமல் ராஜ என்றே கூப்பிடுகின்றனர். இதற்கிடையே மாதவனின் தாய் இறந்து விடுகிறார். கிராமத்திலுள்ள சொத்துக்களை விற்று விட்டு சென்னையில் தனி வீடு வாங்கி மொத்த குடும்பமும் அங்கே குடி வருகிறது.

அத்தம்மாவும், மாதவனின் தந்தை தணிகாசலத்திற்கும் மதப் பற்று காரணமாக சண்டை வருகிறது. இதற்கு குழந்தை ராஜாவை பயன்படுத்துகின்றனர். குடும்ப நிம்மதி பறிபோகிறது. ராஜாவும் சேர்க்கை சரி இல்லாமல் தீய பழக்கங்களுக்கு ஆளாகிறான். இதை பக்கத்துக்கு வீட்டிற்கு குடி வரும் எழுத்தாளார் மகா தேவன் உணர்கிறார்.

ராஜா மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப் பட்டு கவனிக்காமல் விடப்பட்டதால் இறந்து விடுகிறான். மகா தேவன் குழந்தையின் இறுதி சடங்கிலும் உங்கள் மத ஆதிக்கத்தை செலுத்தாதீர்கள் என மாதவன் குடும்பத்தனரிடம் கேட்டுக் கொள்கிறார்.

No comments: