Mar 15, 2012

கடைசி சொட்டு ரத்தம்

விக்னேஸ்வர்தணும் நந்தகுமாரும் இந்திய ராணுவப் படையில் கமேண்டர்களாக இருந்து கொண்டு பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்திற்கு துணை போகிறார்கள். அவர்களின் உத்தரவுப் படி சென்ட்ரல் கமேண்டோ ஹெட்குவர்டர்சில் உள்ள நீர் தொட்டியில் வாயில் பட்டாலே மரணத்தை தரும் பொட்டாசியம் சயனைடை கலக்கிறார்கள். நந்த கோபால் மாட்டிக் கொள்கிறான். இந்திய ராணுவப் படையின் தாக்குதலை தாங்க முடியாமல் அவர்கள் கலந்த நீரினைக் குடித்தே மரணத்தை தழுவுகிறான்.

மறுநாள் சுமார் இரண்டாயிரம் ராணுவ வீரர்களை பறி கொடுத்த பிறகே விபரீதம் புரிகிறது லெப்டினன்ட் ஜெனரல் ராஜப்பாவிற்கு. விக்னேஷ் வர்த்தனை விசாரிக்குப் போது அவன் ஷாபிக் அஹமதைப் பற்றியும் அவன் தங்கியுள்ள லாட்ஜைப் பற்றியும் கூறுகிறான்.

ஷாபிகை பற்றி விசாரிக்க சென்ற இன்ஸ்பெக்டர் மித்ரா, ஷாபிக் மற்றும் அவனது கூட்டாளிகள் மசூதி ஒன்றின் நிலவறையில் பதுங்கி இருப்பதாகவும்,பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், தன்னை அங்கு சிறைப் பிடித்து வைத்திருப்பதையும் இந்திய ராணுவப் படைக்கு பேக்ஸ் அனுப்புகிறார்.

மசூதிக்குள் தாக்குதல் நடத்துவது மதக்கலவரத்தை உண்டாக்கும் என உத்தேசித்து இரண்டு சிறப்பு கமேண்டோக்களை சோதனை செய்து மசூதிக்குள் ஊடுருவச் செய்ய திட்டமிடுகிறார் ராஜப்பா. அதன்படி ஷாபிக்கின் கைக்கூலிகள் எனத் தெரியாமல் சூர்யப் பிரகாசையும் தயானந்தையும் அனுப்புகின்றனர். மசூதிக்கு சுரங்க வலியின் மூலம் உணவு கொண்டு வருகிறாள் ஹாஜியின் மகள் ஜரினா.

ஷாபிக்கின் அடுத்த திட்டமான டெட்லி பால் திட்டம் முறியடிக்கப் படுகிறது. அவன் கமேண்டோக்களை சந்தேகிக்கிறான். ஆனால் அவர்கள் இருவரும் கொல்லப் படுகின்றனர். மசூதி கமேண்டோக்களால் முற்றுகை இடப் படுகிறது. ஷாபிக் தாங்கள் தப்பிச் செல்ல தனி விமானம் வேண்டும் இல்லை என்றால் மசூதிக்குள் வைக்கப்பட்டிருக்கும் பாமை ரிமொடே மூலம் வெடிக்கச் செய்து விடுவதாக மிரட்டுகிறான். மேலும் பாராளுமன்றத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டுகிறான்.

இறுதியில் ஜரினாவின் உதவியின் மூலம் ஷாபிக் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்கிறது. மேலும் பாராளுமன்றமும் ஆபத்தில்லாமல் காப்பாற்றப் படுகிறது.

No comments: