Mar 16, 2012

கிரிமினல் யுனிவெர்சிட்டி

டில்லிக்கு ஜனாதிபதி கையால் சிறந்த நடிகைக்கான விருதினை வாங்க வந்திருந்த நடிகை சம்யுக்தா மற்றும் பாக்ளந்திற்கு எதிரான மேட்சில் கிரிக்கெட் கேப்டன் சந்தீப் பாண்டே இருவரையும் கிரிமினல் யுனிவெர்சிட்டி என்ற பெயரில் ஒரு கும்பல் கோரமாக கொலை செய்து விடுகிறது.

ஏர்மார்ஷல் ஷோலான்ஜியிடமிருந்து ராணுவ ரகசியங்கள் அடங்கிய பைலை கைப்பற்ற பைலட் ராஜேந்திரனின் மனைவி வாசுகி மற்றும் அவளது தங்கை மீரா ஆகியோரை அவர்களது டிரைவர் பாலாவின் உதவியுடன் கடத்தி பைலட்டை மிரட்டுகின்றனர். ராஜேந்திரன் ரகசியமாக விவேக்கிற்கு தகவல் தெரிவிக்கிறார்.

அந்த கும்பல் பாலாவை கொன்று விடுகிறது. பாலாவின் கையில் குறித்திருந்த டெலிபோன் நம்பர் மூலம் தாராவை பிடித்து விசாரிக்கின்றனர். ராஜேந்திரனை யாரோ கொலை செய்து விட்டது போல் நாடகமாடி அந்த கும்பலை குழப்பி இறுதியில் அவர்களை கைது செய்கின்றனர் விவேக் மற்றும் கோகுல் நாத்.

No comments: